நிலம் வைத்திருப்போருக்கு குஷி.. புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா ரெடி.. முதல்ல மதுரை, இப்போ நாமக்கல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த ஆண்டு 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக, 5 லட்சம் பட்டா இந்த வருடத்துக்குள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகளும் தமிழகம் முழுவதும் துரிதமாக நடக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், மதுரையையடுத்து, நாமக்கல் மாவட்டத்திலிருந்தும் மகிழ்ச்சி தகவல் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் நில வரன்முறை நடவடிக்கைகள் அடிப்படையில் பட்டாவாக தரப்படுகின்றன.. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்டின்போது, பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த வருடத்துக்குள் 5 லட்சம் பட்டா வழங்கப்படும் என்று அதிரடியாக தெரிவிக்கப்பட்டது.

புறம்போக்கு நிலங்கள்
அந்த வகையில், 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.55 லட்சம் பட்டா ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. மிச்சமுள்ள பட்டாவை மாதம் 50,000 வீதம் டிசம்பருக்குள் வழங்க வேண்டும் என்றும், வருடத்துக்கு 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் என்றும் பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பையடுத்து, மதுரை மாவட்டத்தில் அரசு சார்பில் 50000 பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையை போலவே, மதுரை மாவட்டத்திலும் புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி பலவருட காலம் குடியிருப்போருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக, ஒருசில நிபந்தனையுடன், பட்டா வழங்க மாவட்ட நிர்வாகமும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் வருகிறார்
இதற்கான விழா கடந்த மார்ச் மாதமே நடைபெறவிருந்த நிலையில், பட்ஜெட் கூட்டம் கூட்டமாக, வரும் மே 16 இறுதியில் நடைபெற உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கே நேரடியாக வந்து இந்த பட்டாவை உரியவர்களுக்கு வழங்குகிறார்.
எனவே 11 தாலுகாவிலும் ஆயிரக்கணக்கான பட்டா தயாரிக்கும் பணிகள் மும்முரமாகி வருகின்றன.. இதற்காக பல வருடங்களாக புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர்கள் யார் யார்? என்று அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். இந்த பட்டாவை பெண்கள் பெயரில் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
நாமக்கல் குட்நியூஸ்
இப்படிப்பட்ட சூழலில், நாமக்கல் மாவட்டத்திலிருந்தும் குட்நியூஸ் வந்துள்ளது.. தமிழக முதல்வர் ஸ்டாலின், நகர்ப்புற பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டா ஏதுமின்றி, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக, அரசின் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்க அறிவுறுத்தியதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திலும் துரித பணிகள் நடக்கின்றன.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வசந்தபுரத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள், நகர்ப்புற வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நபர்களின் குடியிருப்புகளுக்கு, கலெக்டர் உமா நேரிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.. அப்போது அந்த ஆய்வில், குடியிருப்புவாசிகளிடம், நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்தார்.
மகிழ்ச்சியில் திருவள்ளூர், நாமக்கல்
அதுமட்டுமல்ல, ''ஆவணங்கள் சரியாக இருந்தால், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வீட்டுமனை வரன்முறைபடுத்தி, நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், விரைவில் பட்டா வழங்கப்படும்" என்று கலெக்டர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
4 நாட்களுக்கு முன்பு, ''திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 63,124 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அதிகமாக பட்டா வழங்குவது இந்த நிகழ்ச்சியில்தான்" என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications