50 வயசு மயிலாத்தாள்.. "5 நாளா எங்கே இருந்தே".. உருட்டு கட்டையால் அடித்த பரமானந்தம்.. பரிதாப முடிவு!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: 50 வயது மயிலாத்தாள் மீது கணவனுக்கு சந்தேகம்.. "இந்த 5 நாளா எங்கே இருந்தே" என்று கேட்டே.. உருட்டு கட்டையால் மயிலாத்தாளை அடித்து கொன்றுவிட்டார்!

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டியை சேர்ந்தவர் பரமானந்தம்.. 60 வயதாகிறது.. இவர் ஒரு லாரி டிரைவர்... இவரது முதல் மனைவி இறந்து விட்டார்.

அதனால், கடந்த 1995-ம் ஆண்டு மயிலாத்தாள் என்ற என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு காயத்ரி என்ற 22 வயதில் மகள் இருக்கிறார். இவருக்கும் கல்யாணமாகிவிட்டது.

மகள்

மகள்

ஏ.வாழவந்தியை சேர்ந்த கவுதமன் என்பவருடன் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வருகிறார்.. அதனால் பரமானந்தமும் மயிலாத்தாளும் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர்.. பெண்ணை கட்டி கொடுத்துவிட்டாலும் மயிலாத்தாள் மீது கணவனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் சண்டையும் வீட்டில் சகஜமாக நடந்திருக்கிறது.

சந்தேகம்

சந்தேகம்

இந்நிலையில், பரமானந்தத்திற்கு கண் பார்வையில் பிரச்சனை வந்துவிட்டது.. அதனால் டிரைவர் வேலைக்கும் செல்ல முடியவில்லை.. ஒருநாள் மயிலாத்தாளிடம் "நான் வேலைக்கு சென்றபோது சம்பாதித்து உன்கிட்ட தந்த பணம் எல்லாம் எங்கே" என்று கேட்டு தகராறு செய்து உள்ளார். இதையடுத்து மயிலாத்தா சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பவும் 5 நாள் கழித்து, 8-ந் தேதி அவர் வீட்டுக்கு வந்தார்.

உருட்டு கட்டை

உருட்டு கட்டை

இதனால் ஆத்திரம் அடைந்த பரமானந்தம், "இந்த 5 நாளா எங்கே போனே? யாருடன் இருந்தே?" என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.. ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்து உருட்டு கட்டையை எடுத்து வந்து தாக்க.. மயிலாத்தாள் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதை பார்த்து பதறிய பரமானந்தம், மகளுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லவும், உயிருக்கு போராடி கொண்டு இருந்த மயிலாத்தாளை மீட்டு 108 ஆம்புலன்சில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்டு சென்றார்.

விசாரணை

விசாரணை

ஆனால் வழியிலேயே மயிலாத்தா பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து மயிலாத்தாவின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் பரமானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+