பயமுறுத்தும் பறவைகாய்ச்சல்..ஹை அலர்ட்டில் நாமக்கல்..முட்டை, கோழி சாப்பிடலாமா வேணாமா? முக்கிய அட்வைஸ்
நாமக்கல் : கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் கோழிகள், முட்டைகள் அதிகமாக உற்பத்தி செய்யும் நாமக்கல்லிலும் பீதி அதிகரித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரே களத்தில் இறங்கி ஆய்வு செய்து வரும் நிலையில், இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதியானது உச்சத்தில் இருக்கும் நிலையில், அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் நோய் பரவும் அபாயம் இருப்பதால் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவைக் காய்ச்சல்: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள வாத்து மற்றும் கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அந்த மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நாமக்கல் மாவட்டத்திலும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கோழிப்பண்ணைகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
நாமக்கல்லில் எச்சரிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இருக்கும் நிலையில் அங்கு சுமார் ஆறு கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாள்தோறும் ஐந்து கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு அதில் ஒரு கோடி முட்டைகள் கேரளாவிற்கு நாள்தோறும் அனுப்பப்படுகின்றன. இறைச்சிக்காக கோழிகளும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் நிலையில் நிலையில் வாகனங்கள் மூலம் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதிப்பு இல்லை: அதே நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. கோழி பண்ணைகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வாகனங்களும் கிரிமி நாசினி தெளித்ததற்கு பிறகு பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் உமா நேரடியாக களத்தில் இறங்கி கோழிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆட்சியர் அறிவுறுத்தல்: மேலும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றார். இந்நிலையில் நாமக்கல்லில் பண்ணைகளில் பணிபுரிவோர் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு ஆட்சியர் உமா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இறைச்சிகளை நன்கு சுத்தம் செய்து நன்கு வேகவைத்த பிறகு விற்பனை செய்ய வேண்டும். கோழிப் பண்ணைகள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளில் பணிபுரிவோர் உரிய பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
எச்சரிக்கை: கோழிப்பண்ணைகளில் இருக்கும் வாகனங்கள் உள்ளும் வெளியே செல்லும்போது கிருமி நாசினி தெளித்து கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும், பண்ணைகள் முழுவதும் குளோரின் டை ஆக்சைடு தெளிக்கப்பட்டு உயிரி நீக்கம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். மேலும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்போர் உடனடியாக அரசு மருத்துவமனையை அடக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications