மாப்பிள்ளை இவருதான்... ஆனால் மாமியார் வீடுதான் லைட்டா மாறி போச்சு!
நாமக்கல் அருகே 2வது திருமணம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

நாமக்கல்: மாப்பிள்ளை இவருதான்... ஆனால் மாமியார் வீடுதான் லைட்டா மாறி போச்சு! அவ்வளவுதான்!!
நாமக்கல் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். 4 வருடங்களுக்கு முன்பு காலேஜில் படிக்கும்போது சரஸ்வதி என்ற பெண்ணுடன் லவ் ஸ்டார்ட் ஆகி இருக்கு. அதனால சரஸ்வதியை அழைத்து கொண்டு ஊர்ஊராக கூட்டி சென்று ஜாலியாக இருந்திருக்கிறார்.
இதனால் சரஸ்வதி கர்ப்பமானார். ஆனால் காலேஜ் படிப்பே முடியாததால், பிள்ளையை எப்படி பெற்று கொள்வது என்று நினைத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார். பிறகு காலேஜ் படிப்பு முடிந்தது. சென்னையில் வேலை தேடி கார்த்திகேயன் வந்துவிட்டார். அதனால் சரஸ்வதியையும் சென்னை வந்துவிடுமாறு சொல்லவும் இவரும் கார்த்திகேயனை தேடி சென்னைக்கு வந்துவிட்டார்.

மீண்டும் அபார்ஷன்
5 மாசத்துக்கு முன்னாடி ஸ்ரீபெரும்புதூர் விநாயகர் கோயிலில் கார்த்திகேயன் சரஸ்வதிக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார். ஒரு வீட்டையும் பார்த்து இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள். இப்போது சரஸ்வதி திரும்பவும் கர்ப்பமானார். உடனே கார்த்திகேயன், "இப்பதான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு. லைஃப்பில் இன்னும் செட்டில் ஆகல. அதனால இந்த குழந்தையை கலைச்சிடு" என்று சொல்லி இருக்கிறார். உடனே சரஸ்வதியும் இந்த கர்ப்பதையும் கலைத்துள்ளார்.

சொந்தக்கார பெண்
இந்நிலையில், போன வாரம் சரஸ்வதியை சென்னையில் தனியாக விட்டு விட்டு தன்னுடைய பாலப்பட்டி கிராமத்துக்கு வந்தார் கார்த்திகேயன். அப்போது கார்த்திகேயனுக்கு அவரது வீட்டில் 2வது கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதற்காக அவரது சொந்தக்கார பெண்ணை பேசி முடித்து வைத்திருந்தார்கள். இந்த விஷயம் எல்லாம் ஏற்கனவே கார்த்திகேயனுக்கு தெரிந்துதான் ஊருக்கு கல்யாணம் செய்து கொள்ள கிளம்பி வந்தார்.

சரஸ்வதி புகார்
கல்யாண தகவல் சென்னையில் உள்ள சரஸ்வதிக்கு யாரோ தகவல் சொல்லிவிடவும், உடனே பாலப்பட்டிக்கு வந்தார் சரஸ்வதி. நேராக மாமியார் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி, இது சம்பந்தமாக சண்டை போட்டார். அதற்கு எல்லோரும் சேர்ந்து சரஸ்வதியை அடித்து உதைத்து வீட்டை விட்டு விரட்டி விட்டுள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, நேராக போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டார். எப்படியாவது நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு புகார் அளித்தார்.

மாப்பிள்ளை கைது
அதன்பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், மண்டபத்தில் கார்த்திகேயனுக்கு கல்யாணம் நடக்க இருந்ததை அறிந்து நேராக அங்கு சென்றார்கள். பட்டு வேட்டி, மாலை என மாப்பிள்ளை கெட்டப்பில் இருந்த கார்த்திகேயனை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மணக்கோலத்தில் மாப்பிள்ளை கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications