ராசிபுரத்தில் அ.தி.மு.க தோல்வி.. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் ஓட்டுக்கு வேட்டு வைத்த நாம் தமிழர் கட்சி!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜா தோல்வி அடைவதற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பிடித்து சாதித்துள்ளது திமுக.

ஸ்டாலின் முதல்வர்

ஸ்டாலின் முதல்வர்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமர முடியாமல் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் முழுவதுமாக தொகுதிகளை பறிகொடுத்துள்ளது அதிமுக.

முன்னாள் அமைச்சர் தோல்வி

முன்னாள் அமைச்சர் தோல்வி

கொங்கு மண்டலம் தங்களின் கோட்டை என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வியை தழுவி உள்ளார். அந்த வகையில் ராசிபுரம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார் முன்னாள் அமைச்சர் சரோஜா. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சராக இருந்து போட்டியிட்டார் சரோஜா.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

திமுக வேட்பாளராக மதிவேந்தன் களம் கண்டார். 88,775 வாக்குகள் பெற்ற சரோஜா, 1952 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கே.சிலம்பரசி 11,295 வாக்குகள் பெற்று திமுக, அதிமுகவுக்கு அடுத்து 3-ம் இடத்தை பிடித்தார். இதுவே முன்னாள் அமைச்சரின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

6-ல் 4 திமுக

6-ல் 4 திமுக

நாம் தமிழர் கட்சி வேட்பளார் பெற்ற வாக்குகளில் சுமார் 2,000 வாக்குகள் கூடுதலாக சரோஜாவுக்கு கிடைத்து இருந்தாலும் அவர் வெற்றி பெற்று இருப்பார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியில் நான்கினை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராசிபுரம் தொகுதியை போன்று மற்ற சில தொகுதிகளிலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளை நாம் தமிழர் கட்சி கணிசமான அளவில் பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+