லியோ: "அவன் முடிவெடுத்துட்டான்" "அதிகார திமிரை" காட்டாதீங்க- விஜய்க்கு ஆதரவு- திமுகவை விளாசிய சீமான்
நாமக்கல்: நடிகர் விஜய் சினிமாவில் நடிப்படை நிறுத்திவிட்டு அரசியல் கட்சி தொடங்க முடிவெடுத்துவிட்டதால்தான் லியோ திரைப்படத்துக்கு ஒவ்வொரு இடையூறாக செய்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. ரகுமானின் இசை கச்சேரி விபரீதங்களைத் தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டதாக லியோ படக் குழுவினர் தெரிவித்தனர். தற்போது லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சி குறித்த சர்ச்சை நீடித்து வருகிறது.

ஜெயிலருக்கு இடையூறு செய்தீர்களா?: ஆனால் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ்நாடு அரசுதான் முட்டுக்கட்டை போட்டது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நாமக்கல்லில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் அளித்த பதில்: விஜய்யின் லியோ படத்துக்கு தமிழ்நாடு அரசு நெருக்கடி கொடுக்கிறது. ஜெயிலர் படத்துக்கு இதுமாதிரி இடையூறு செய்யப்பட்டதா? அதே நேரு விளையாட்டரங்கில்தான் ஜெயிலர் பாடல்கள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்னர் விஜய்யின் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்திருக்கிறதா இல்லையா?
அரசியலுக்கு வருவதால் நெருக்கடி: இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்துக்கு ஏன் தமிழ்நாடு அரசு தருகிறது? ஏன்னா அவன் (விஜய்) கட்சி ஆரம்பிக்கப் போறான்னு தெரியுது.. அரசியலுக்கு வரப்போறான்னு தெரியுது. இதனால நீங்க அவருக்கு நெருக்கடி கொடுக்கிறீங்க..

தேவையில்லாத சீண்டல்: அவன் (விஜய்) ஒரு முடிவெடுத்துட்டான்.. நடிக்கிறதை நிப்பாட்டிட்டு அரசியலுக்கு வரப் போறேன்னு முடிவெடுத்துட்டான். தேவையில்லாம நீங்க அவனை சொறிந்துவிடுவதுதானே.. சீண்டல்தானே. அதிகாரத் திமிரில் செய்யுற சேட்டைதானே.. தண்ணியில போற பந்தை அமுக்கி அமுக்கி விட்டா எகிறத்தானே செய்யும்.தூரத்துல இருந்து பார்க்கிற நமக்கே வெறி வருது.. அப்ப அவனுக்கு (விஜய்க்கு) எப்படி இருக்கும்?

ரெட் ஜெயண்ட் காரணம்: ரெட் ஜெயண்ட் ஒரு படம் தயாரித்தால் பிச்சுகிட்டு ஓடிடுமா? இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிடவில்லை.. அதைத்தவிர என்ன காரணம்? எப்ப இருந்து அவனுக்கு நெருக்கடி தருகிறீங்க.. பாடல் வெளியீட்டு விழாவில் இருந்து அவனை டார்ச்சர் செய்றீங்க. நியாயத்தைப் பேசுவோம். இவ்வாறு சீமான் கூறினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications