Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல் அசத்தல்.. ஆண்கள் பங்கேற்ற முப்பூசை திருவிழா.. ராசிபுரம் கோயிலில் 1600 கிலோ கமகம கறிவிருந்து

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பனார் கோவில் விழாவானது, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. கடந்த 100 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சமபந்தி கறி விருந்து விழா குறித்து, கிராம மக்கள் சொல்வதென்ன?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டியை ஒட்டியுள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோயில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோயிலுக்கு ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு செய்வதோடு, மலைவாழ் குடும்பத்தினரே கோயில் பூசாரியாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.

Namakkal Rasipuram 1600 kg Non Veg Feast

முப்பூஜை விழா: இந்த கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் கடைசி ஞாயிறன்று முப்பூஜை விழா நடப்பது வழக்கமாகும்.. அப்போது கிடா, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு, அந்த கறியை சமைத்து சமபந்தி விருந்து வைக்கப்படும். அந்தவகையில், இந்த வருடத்துக்கான சமபந்தி விருந்துக்கான பூஜைகள் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கின.

முதலில் பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். அதன் பிறகு கோயில் முன்பு ஆடு, பன்றி, கோழி ஆகியவை பலியிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையில் 28 ஆடுகள், 29 சேவல்கள், 28 பன்றிகள் என முப்பூஜை பலிகள் இடப்பட்டன. அப்போது தங்களது கடந்த வருட வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்கள்.

மெகா விருந்து: இதனையடுத்து, ப.சிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையல் தடபுடலாக ஆரம்பமானது.. மிகப்பெரிய பாத்திரங்களில் மெகா விருந்து விடிய விடிய பொதுமக்களுக்கு தயாரானது.. இதில், 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே சமையல் செய்தனர்... 450 கிலோ ஆட்டுக்கறி, 50 கிலோ கோழிக்கறி, 1,100 கிலோ பன்றிக்கறி தயார் செய்யப்பட்டது... மொத்தமாக 2,000 கிலோ அரிசி மூலம் உணவு தயார் ஆனது. இதில், 1,600 கிலோ கறி சமைக்கப்பட்டது.

தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள வயலில், சமைத்த அசைவ உணவை, உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 7000க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வைத்து பரிமாறினர்.

மகிழ்ச்சி: வளர்ச்சியின்றி மக்கள் விவசாயத்தில் செழித்து வாழ , கடந்த 100 ஆண்டுகளாக இந்த சமபந்தி கறி விருந்து விழா நடைபெற்று வருவதாகவும், மக்கள் நோய்நொடி நீங்குவதுடன், குடும்ப பிரச்னைகள் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பரம்பரை பரம்பரையாக இந்தவிழாவை நாங்கள் நடத்தி வருவதாகவும் அக்கிராம மக்கள் கூறினார்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+