உதவிய கூகுள் மேப்.. பவாரியா பாணியில் பல்வால் கொள்ளையர்கள்! நாமக்கல் போலீசாரிடம் சிக்கியது எப்படி?
நாமக்கல்: கேரளாவில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை குறிவைத்து ரூ.68 லட்சம் கொள்ளையடித்த பல்வால் கொள்ளை கும்பலை தமிழக போலீசார் நாமக்கல் மாவட்டத்தில் என்கவுண்ட்டர் செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்களுக்கும், தமிழகம் உள்பட தென்மாநிலங்களை அலறவிட்ட பவாரியா கொள்ளை கும்பலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் திரிச்சூரின் புறநகர் பகுதியில் 25 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் 3 ஏடிஎம்களில் இனு்று காலையில் ஒரு கும்பல் கொள்ளையடித்தது. மாப்ரனம் பிளாக் சந்திப்பு, நாய்க்கனல் சோர்னூர் ரோடு, கொலாழி பகுதியில் உள்ள 3 எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நுழைந்த கும்பல் கேமராவில் ஸ்பிரே அடித்து ரூ.68 லட்சத்தை கொள்ளையடித்து வெள்ளை நிற கிரிட்டா காரில் தப்பியது.

இவர்கள் தமிழகம் வந்திருக்கலாம் என்பதால் கேரளா போலீசார் தமிழக போலீசாரை உஷார்ப்படுத்தினர். எல்லை பகுதியில் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஒரு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் 2 பைக், ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்து பைக்குகளில் விரட்டி சென்றனர். போலீசாரும் வாகனங்களில் கண்டெய்னர் லாரியை விரட்டி சென்றனர். வெப்படை என்ற இடத்தில் போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர். அதில் இருந்தவர்கள் கற்களை வீசினாலும் போலீசார் லாரியின் முன்பகுதியில் இருந்த டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்தனர். இதில் டிரைவரின் பெயர் ஜூமான் என்பது தெரியவந்தது.
இவர்கள் 5 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது கண்டெய்னரில் இருந்து சத்தம் வந்தது. தோப்புக்காடு பகுதியில் அதனை திறந்து பார்த்தபோது 2 பேர் இருந்தனர். ஒருவரை போலீசார் பிடித்த நிலையில் அஷ்ரூ என்பவர் ஓடினார். அதேபோல் போலீசாரின் பிடியில் இருந்த டிரைவர் ஜூமானும் தாக்கிவிட்டு ஒடினார். இதனால் பாதுகாப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜூமான் பலியானார். அஷ்ரூ காலில் காயமடைந்தனர்.
அஷ்ரூ உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது கேரளா ஏடிஎம்களில் கொள்ளையடித்ததும், அதன்பிறகு காரை கண்டெய்னரில் வைத்து தப்ப முயன்றதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இவர்கள் ஹரியானாவில் பல்வால், நூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதுதவிர இந்த கும்பல் தமிழகம் உள்பட தென்மாநிலங்களை மிரட்டிய பவாரியா கும்பல் பாணியில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் பவாரியா கும்பல் கதையை அடிப்படையாக வைத்து தான் எடுத்தது. இந்த கும்பல் கடந்த 1995 முதல் 2006 வரை தென்மாநிலங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்தது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்தது இந்த கும்பல். இந்த கும்பல் தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், காங்கிரஸ் கட்சியின் தாளமுத்து நடராஜன், திமுகவின் கஜேந்திரன் உள்பட 18 பேரை கொன்றது. மேலும் 64 பேர் வரை காயமடைந்து இருந்தனர். இந்த பவாரியா கும்பல் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கண்டெய்னர் லாரியில் தமிழகம் வந்து வியாபாரம் செய்வது போல் தனியாக இருக்குமு் வீடுகளை நோட்டமிட்டு நடுராத்தியில் கொள்ளையை அரங்கேற்றியது. இந்த கும்பலை தமிழக போலீசார் முற்றிலுமாக ஒழித்து கட்டினர்.
இத்தகைய சூழலில் தான் தற்போது கேரளா ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ள கும்பல் பல்வால் கொள்ளையர்களுக்கும், பவாரியா கொள்ளையர்களுக்கும் ஒற்றுமை உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது தற்போது கேரளாவில் கொள்ளையடித்த பல்வால் கொள்ளையர்களும் கண்டெய்னர் லாரியை தான் பயன்படுத்தி உள்ளனர். பவாரியா கும்பல் கண்டெய்னர் லாரிக்குள் தனியே அறை உருவாக்கி அதில் பதுங்கி தப்பித்தனர். ஆனால் இந்த பல்வால் கும்பல் கொள்ளையடிக்க பயன்படுத்தும் காரை கண்டெய்னருக்குள் வைத்து தப்பிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் கூகுள் மேப் மூலம் எங்கெல்லாம் ஏடிஎம்கள் உள்ளது என்று பார்த்து புறநகர் பகுதியில் காவலாளி மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் உள்ள இடங்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்கின்றனர். இந்த கொள்ளையின்போது கண்டெய்னர் லாரி ஏடிஎம் இயந்திரம் அருகே செல்லாது. மாறாக அவர்கள் கொண்டு செல்லும் கார் தான் ஏடிஎம் மையங்கள் அருகே செல்லும். அதில் இருந்து அவர்கள் கொள்ளையடித்து காரில் தப்புவார்கள். அதன்பிறகு அந்த காரை கண்டெய்னரில் ஏற்றி சொந்த ஊருக்கு செல்ல முயன்று தமிழக போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
மேலும் தற்போதைய சூழலில் கைதான கொள்ளை கும்பல் வேறு ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டு இருந்ததா? என்பது பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை. இதுபற்றி கைதான 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications