Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்லீஸ்ட் ஒரு நாள் பொறுத்திருக்க கூடாதா? அப்பிய சோகத்துடன் நாமக்கல் மாணவி.. கேட்கவே கஷ்டமாயிருக்கே

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் தேர்வெழுதினர். இன்றைய தினம் 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.. ஆனால், இன்று தன்னுடைய தேர்வு முடிவு என்னவென்றே தெரியாமல் நேற்றைய தினம் நாமக்கல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ளது நல்லாக் கவுண்டம்பாளையம்.. இங்கு வசித்து வரும் தம்பதி பிரகாசம் - கவிதா.. பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கவிதா பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியின் ஒரே மகள் கீர்த்திவாசனி.. 15 வயதாகிறது.. பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.. இந்த முறை கீர்த்திவாசனியும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.. தேர்வு முடிவுகள் இன்றைய தினம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

Namakkal 10th result 10

பயந்து கிடந்த மாணவி

ரிசல்ட் தேதி வெளியிட்டதுமே மாணவிக்கு பயம் பீடித்து கொண்டது.. ஒருவேளை தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைக்குமோ? ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற கலக்கத்திலும், அச்சத்திலும் தவித்து வந்துள்ளார்.. இன்று ரிசல்ட் என்பதால், நேற்றைய தினம், அளவுக்கு அதிகமான டென்ஷனில் இருந்தார் கீர்த்திவாசனி.. ஒருகட்டத்துக்கு மேல் பயம் அதிகமாகிவிட்டதால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேனில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அங்கன்வாடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கவிதா, மகள் ஃபேனில் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அலறி கதறினார்.. இதையடுதது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து, கவிதாவின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்..

பிறகு உடனடியாக ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினார்கள்.

இன்று தேர்வு ரிசல்ட்

இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. இதில் தமிழ்நாடு முழுவதும் 93.80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அந்தவகையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி கீர்த்தி வாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அதாவது, தமிழ் - 70, ஆங்கிலம் - 83, கணிதம் - 81, அறிவியல் - 70, சமூக அறிவியல் - 44 என மொத்தம் 348 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

மன அழுத்தமே காரணம்

நேற்றைய தினம் திருப்பூரில் பிளஸ் 1 மாணவன் ஒருவரும் இதே தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்டார்.. பெரும்பாலும், பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பே, குழந்தைகளை இயல்புக்கு மீறிய மனஅழுத்தத்துக்கு தள்ளிவிடுகின்றன.

தேர்வு முடிவுகள் மதிப்பெண்களை பொறுத்தே வெளியிடப்படுகிறது என்பதால்தான், இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட நேரிடுகிறது.. தேர்வில் மட்டுமல்ல, மார்க்குகள் குறைந்தாலும்கூட, மாணவர்கள் மன உளைச்சல் அதிகமாகி தவறான தற்கொலை எண்ணத்திற்கு துாண்டப்படுகின்றனர். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்பது பிள்ளைகளுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை கையாள ஆசிரியர்களும், பெற்றோர்களும் அறிவுறுத்த வேண்டும்.

மறுகூட்டல், மறுதிருத்தல் முறைகளை பயன்படுத்தச் சொல்லி, அவர்களுக்கு தைரியத்தை வழங்கலாம், அல்லது மறுதேர்வு பற்றி பேசி ஊக்கம் தரலாம். இயல்பு நிலைக்கு பிள்ளைகள் வராத பட்சத்தில், உடனே ஒரு நிபுணரைச் சந்தித்துக் கவுன்சலிங் பெறுவது அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+