நாமக்கல்: "கோழி" மண்டலத்தில் "கோல்" அடிக்கப் போவது யார்? வலுவான வாக்கு வங்கியுடன் திமுக- அதிமுக!
நாமக்கல்: கோழி இறைச்சி, முட்டை மற்றும் லாரி சார் தொழில்கள் என சரக்கு போக்குவரத்தின் மையமாக திகழும் நாமக்கல் தொகுதியில் திமுகவும் அதிமுகவும் சம பலத்துடன் களம் காண்கின்றன. திமுகவில் இருந்து வெளியேறிய கேபி ராமலிங்கம், பாஜகவின் வேட்பாளராக களம் காண்கிறார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி: ராசிபுரம் லோக்சபா தொதிக்குப் பதிலாக மறுசீரமைப்பில் உதயமானது நாமக்கல். இத்தொகுதியில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள்: நாமக்கல், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர்,
ராசிபுரம் (தனி), சேர்ந்தமங்கலம் (தனி).

நாமக்கல் தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,44,036; ஆண்கள்- 7,04,270; பெண்கள் 7,39,610; 3-ம் பாலினத்தவர்- 156.
ராசிபுரம் (தனி) தொகுதி என்பது உருமாறிய பின்னர் நாமக்கல் லோக்சபா தொகுதியாக நடைபெற்ற தேர்தல்களில் திமுக 2 முறையும் அதிமுக 1 முறையும் வென்றுள்ளது.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
காந்திச்செல்வன்(திமுக) 3,71,476
வைரம் தமிழரசி( அதிமுக) 2,69,045
மகேஸ்வரன்( தேமுதிக) 79,420
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி. ஆர். சுந்தரம்(அதிமுக)5,63,272
காந்திச்செல்வன்(திமுக) 2,68,898
எஸ். கே. வேல் (தே.மு.தி.க) 1,46,882
ஜி. ஆர். சுப்ரமணியம்( காங்கிரஸ்) 19,800
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
சின்ராஜ்(திமுக கூட்டணி) 6,26,293
காளியப்பன்(அதிமுக) 3,61,142
பாஸ்கர் (நாம் தமிழர் கட்சி) 38,531
தங்கவேலு(மக்கள் நீதி மய்யம்) 30,947
சாமிநாதன்(அமமுக) 23,347
2024-ம் ஆண்டு களம் காணும் வேட்பாளர்கள்
மாதேஸ்வரன் (திமுக கூட்டணி)
தமிழ் மணி (அதிமுக)
கேபி ராமலிங்கம் (பாஜக)
கனிமொழி( நாம் தமிழர் கட்சி)
நாமக்கல் நிலவரம் என்ன?: விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட தொகுதி. நெல், கரும்புதான் பிரதான பயிர்கள். அத்துடன் கோழிப்பண்ணை, லாரி சார்ந்த தொழில்கள் முக்கியமானவை. முட்டை, கோழி இறைச்சி, லாரி சார் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் நாமக்கல் தொகுதி முக்கிய இடம் வகிக்கிறது. இத்தொகுதியில் திமுகவும் அதிமுகவும் வலிமையான வாக்குவங்கியைப் பெற்றிருக்கின்றன. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கே கடந்த 2 தேர்தல்களிலும் இத்தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. திமுகவின் வாக்கு வங்கி மற்றும் சின்னம் பலத்தில் வெல்வோம் என்பது அவர்களது நம்பிக்கை. அதிமுக வலுவான வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும் இரட்டை இலைக்கான பாரம்பரிய வாக்குகள் கிடைக்கும் என்பது. திமுகவின் முகமாக இருந்த கேபி ராமலிங்கம், பாஜகவின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்களுடன் நாம் தமிழர் கட்சியும் களம் காண்கிறது. பிரதான போட்டியாக இருப்பது திமுக- அதிமுக இடையேதான் என்கின்றன கள நிலவரங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications