எச்சரிக்கை: நாமக்கல் லாரியில் கசிந்த சமையல் எண்ணெயை பிடிச்சீங்களா?.. காவல்துறை ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் அருகே விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெய் கசிந்தது. இதை உள்ளூர்வாசிகள் குடம், குடமாக பிடித்து சென்றனர். இந்நிலையில் நாமக்கல் காவல்துறை அது சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய். அதை சமையலுக்கு பயன்படுத்த இயலாது என்று எச்சரித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஆந்திரா பதிவு எண் கொண்ட ஒரு டேங்கர் லாரியில் சமையல் எண்ணெய் ஏற்றி செல்லப்பட்டது. அந்த லாரி நேற்று நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை பகுதி அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த லாரியின் பின் பகுதி கடுமையாக சேதமடைந்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

namakkal-police-gave-warning-on-people-gathered-oil-in-accident-lorry

இந்நிலையில் அந்த லாரியில் இருந்து சமையல் எண்ணெய் கசிந்தது. இந்த தகவல் அறிந்த உள்ளூர் வாசிகள் உடனடியாக அங்கு வந்து லாரியில் கசிந்த எண்ணெயை பிடித்து சென்றனர். எண்ணெய் தொடர்ந்து கசிந்து வந்ததால் மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து குடம் மற்றும் பக்கெட்கள் எடுத்து வந்து எண்ணெயை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மக்கள் வரிசையில் நின்று தண்ணீர் பிடிப்பது போல எண்ணெய் பிடித்து சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நல்லிபாளையம் காவல் நிலையம் ஆயில் லோடு ஏற்றிவந்த லாரி மீது மற்றொரு வாகனம் மோதி ஆயில் கசிந்து கொண்டிருக்கிறது.

08.06.2025 ஆம் தேதி, நள்ளிரவு 1.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் உட்கோட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதன்சந்தை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது வாகனம் பழுது ஏற்பட்டது.

இதனால் மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது அதிகாலை 5.00 மணியளவில் அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆயில் டேங்கில் கசிவு ஏற்பட்டு சோயா ஆயில் ரோட்டில் ஊற்றியது. பொதுமக்கள் சிலர் இந்த சோயா ஆயிலை பிடித்து செல்வது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

விபத்தில் கசிவு ஏற்பட்டு வெளியேறிய சோயா ஆயிலானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் ஆகும். எனவே, இந்த சோயா ஆயிலை பொதுமக்கள் யாரும் உணவு பொருளாக பயன்படுத்த வேண்டாம் என்று நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+