வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அதிரடி வழக்குப் பதிவு
நாமக்கல்: அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன். இவர் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜாவின் நெருங்கிய உறவினராகும்.
இந்தநிலையில் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக ராசிபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரோஜாவிடம் பணம்
முன்னாள் அமைச்சர் சரோஜா என்னையும், என் மனைவியையும் அழைத்து ராசிபுரத்தில் வீடு கட்ட வேண்டும். எனவே அதற்கு பணம் வாங்கி கொடுத்தால் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று தன்னிடம் கூறியதாகவும், இதனை நம்பி தனது மனைவி 15 பேரிடம் ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி அதில் ரூ.50 லட்சத்தை முதற்கட்டமாக எனது வீட்டில்வைத்து சரோஜாவிடம் வழங்கினேன் என்றும் புகாரில் குணசீலன் தெரிவித்திருந்தார்.

வேலை வாங்கி கொடுக்க
இதையடுத்து 2வது கட்டமாக ரூ.26 லட்சத்து 50 ஆயிரத்தையும் வழங்கியதாகவும், ஆனால் சரோஜா தான் கூறியபடி என்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் என்றும் குணசீலன் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

யார் யார் எவ்வளவு பணம்
பின்னர் அவர் அளித்த பேட்டியில், பணம் கொடுத்தவர்கள் தன் மீது போலீசில் புகார் அளிப்பதாக கூறி வருவதாகவும் எனவே, ராசிபுரம் போலீசில் நான் புகார் அளித்துள்ளேன். அதில் யார்? யார்? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற விவரத்துடன் கூறி உள்ளேன் என்றும் குணசீலன் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர்கள்
இந்த நிலையில் தற்போது சரோஜாவிற்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் முறைகேடு புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications