சில்லி சிக்கன் மீது உசுரையே வெச்ச அப்புவுக்கு சில்லி சிக்கனே இறுதி விருந்து! நாமக்கல்லில் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாய்கள் மீதான பாசம் என்பது எப்போதுமே யாருக்குமே குறைவதில்லை.... அதிலும் அமெரிக்கர்களுக்கும் அதிக பாசம் என்று சொல்லலாம். அங்கெல்லாம் நாய் இல்லாத வீடுகளே இல்லை.. ஒவ்வொரு அப்பார்ட்மென்டிலும் தனி டாக் பார்க் வைக்கிற அளவுக்கு செல்லமாக நாய்களை வளர்ப்பதை பார்க்க முடிகிறது.. குடும்பத்தில் ஒரு நபராகவே நாய்களை பாவிக்கும் போக்கு நம்மிடமும் சற்று அதிகமாகவே உள்ளது. இதோ இந்த நாமக்கல் சம்பவத்தை பாருங்கள்

சமீபகாலமாகவே சென்னை மற்றும் புறநகர் பகுகளில் மீண்டும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

Namakkal Chilli Chicken Appu

பைக்குகளில் செல்வோரை பின்தொடர்ந்து துரத்துவது, இரவு நேரத்தில் தெருக்களில் தனியாக செல்லும் நபர்களை தாக்கி கடிப்பது, பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்களை விரட்டி கடிப்பது என தெருநாய்களால் ஏற்படும் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தபடியே உள்ளது..

நாய்க்கடி பாதிப்பு

அதாவது கடந்த ஜூன் வரையிலான கணக்கெடுப்பின்படி 39,259 பேரை நாய்கள் கடித்திருக்கிறதாம்.. இதில் சென்னையில் மட்டும் நாய்க்கடியால் 5900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன..

இதையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 கால்நடை மருத்துவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளில் நாய்களை பிடிப்பதற்காக 500 நபர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன், கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படும் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை தவிர, மாநிலம் முழுவதும் மாநில அளவிலான விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் நாய் வளர்ப்பிற்கான உரிமம் மற்றும் விதிமுறைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

நன்றியுள்ள பிராணி - செல்லமான நாய்கள்

எனினும் நாய்கள் மீதான பிரியம் பெரும்பாலானோருக்கு குறையவே இல்லை. விசுவாசனமான, பணிவான நாய்களை குடும்பத்தினர் அளவுகடந்த அன்பை கொட்டி வளர்க்கிறார்கள்.. எனவேதான் தங்களது நாய் காணாமல் போய்விட்டால் போலீசில் புகார் தந்து, போஸ்டர் அடித்து ஒட்டி தேடும் முயற்சியிலும் பல குடும்பத்தினர் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது..

அவ்வளவு ஏன் இறந்துபோன தங்கள் எஜமானருக்காகவே குரைத்து குரைத்து உயிரைவிட்ட பல நாய்களும் உலகில் உண்டு..

நாமக்கல் நெகிழ்ச்சி

இப்போது நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் நாய் ஒன்றை அந்த பகுதி மக்கள் அனைவருமே சேர்ந்து வளர்த்து வந்தனர்.. அந்த நாய்க்கு அப்பு என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

கிட்டத்தட்ட 15 வருடங்களாக அந்த பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் செல்லமாக வளர்ந்தது.. அனைவரின் வீடுகளுக்கும் சென்று, அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக அப்பு பழகிவந்தது.. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு

உரிமையாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும், அப்பு சென்றால், அதற்கு சாப்பாடு, பால், பிஸ்கட் என தந்து பராமரித்து வந்துள்ளனர் அந்த பகுதி மக்கள்..

அப்புவுக்கு சில்லி சிக்கன்

15 வருடங்கள் செல்லமாக வளர்ந்த அப்புவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.. மூப்பு காரணமாக சில நாட்களாகவே சோர்ந்து போயிருந்த அப்பு, இன்று அதிகாலை இறந்துவிட்டது.. இது குடியிருப்புவாசிகளை பெரும் கவலைக்குள்ளாக்கிவிட்டது.

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டதை போல, அனைவருக்குமே சோகம் அப்பியது.. இதையடுத்து, பொதுமக்கள் ஒன்றுகூடி, அப்புவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.. மனிதர்களுக்கு செய்யும் சடங்கை போலவே, அப்புவுக்கும் அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அப்புவுக்கு எப்போதுமே சில்லி சிக்கன்தான் மிகவும் பிடிக்குமாம்.. எனவே, சில்லி சிக்கன், பால், பிஸ்கட் போன்றவற்றை அப்புவின் அருகில் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.. அப்பு இறந்துவிட்ட செய்தியை கேள்விப்பட்டு, சுற்றுவட்டாரத்திலிருந்தும் பலரும் வந்து, அஞ்சலி செலுத்தினர்.. இந்த செய்திதான் இணையத்திலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+