நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவில் என்ன நடக்குது? அதிமுகவுக்கு தாவும் திமுக முக்கிய பிரமுகர்கள்!
நாமக்கல்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக முக்கியப் பிரமுகர்கள் வரிசையாக அதிமுகவுக்கு படையெடுப்பது திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திமுக நகர்மன்றத் தலைவர் விஜய் கண்ணன் அதிமுகவில் இணையவுள்ள நிலையில் பள்ளிப்பாளையம் திமுக ஒன்றிய கவுன்சிலர் தனசேகரனும் திமுகவில் இணையவிருக்கிறார். அதுவும் தன்னுடன் 500 திமுகவினரை அதிமுகவுக்கு அழைத்துச் செல்லவுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைவதற்காக அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு காத்திருக்கிறார். ஆளுங்கட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் ஒருவர் அதிமுகவுக்கு செல்வது திமுகவின் இமேஜை பாதிக்கச் செய்துள்ளது.
அதிருப்தியில் இருந்த திமுக நிர்வாகிகளை முன்கூட்டியே சமாதானப்படுத்த தவறிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வயதில் இளையவர் எல்லோரையும் அணுசரித்துச் செல்வார் என்பதால் தான் மதுரா செந்திலுக்கு திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

ஆனால் அவரோ பொறுப்பேற்று ஓராண்டு கூட ஆகாத நிலையில் மாவட்டத்தில் ஏகத்துக்கும் எதிர்ப்புகளை சம்பாதித்து வைத்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனிடையே திமுக மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் மீது அதிருப்தியில் இருக்கும் திமுக நிர்வாகிகளை வளைக்க மாஜி அமைச்சர் தங்கமணி தரப்பு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
மேற்கொண்டு முக்கிய பிரமுகர்கள் யாரும் அதிமுகவுக்கு தாவிவிடக் கூடாது என்பதால் சமரச முயற்சிகளில் இறங்கியுள்ளார் மதுரா செந்தில். ஆனால் அது எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications