மண்டைக்கேறிய போதை.. பாசமாக பசு மாட்டை வளர்த்த கீதாவுக்கு இப்படியா நடக்கணும்? நடுங்கி போச்சு நாமக்கல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று குழந்தைகளை கழுத்தறுத்துக் கொலை செய்து தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை இன்று காலை முதலே ஏற்படுத்தி வருகிறது.. கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மற்றொரு கொலை சம்பவம், நாமக்கல் மாவட்டத்தையே உறைய வைத்து வருகிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளி இப்போது சிறையில் உள்ளார். என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்துள்ளது மேல்முகம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் தனபால்.. 44 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கீதா.. இவர்களுக்கு 8 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்...

விசைத்தறி கூலி தொழிலாளியான தனபாலுக்கு குடிப்பழக்கம் உள்ளது.. இதனால் தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து கீதாவிடம் தகராறு செய்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்..
கீதாவுக்கு என்னாச்சு
அப்படித்தான் நேற்று முன்தினம் இரவும், தனபால், தலைக்கேறிய போதையுடன் வீட்டுக்கு வந்துள்ளார்.. இதனால் மறுபடியும் தம்பதிக்குள் தகராறு வெடித்திருக்கிறது.. ஆனால், இரவு 11 மணியளவில், வீட்டிலேயே கீதா சடலமாக தொங்கினார்.. உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கீதாவின் சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்..
கீதாவின் மரணம் தொடர்பான விசாரணையையும் துவங்கினர்.. அப்போது தனபாலின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, கீதா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள்..
உடம்பெல்லாம் காயங்கள்
ஆனால், தனது தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, கீதாவின் அக்கா பிரியங்கா என்பவர் புகார் போலீசில் புகார் தந்து பரபரப்பை கிளப்பினார். ..
போலீசாரிடம் பிரியங்கா சொல்லும்போது, "என்னுடைய தங்கை கீதாவுக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு வரும்.. இதை பற்றி பலமுறை என்னிடம் சொல்லி கீதா அழுதுள்ளார்.. தற்போது சடலமாக உள்ள கீதாவின் கால், தலை என உடம்பில் பல இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன.. எனவே, கணவர் தனபால், அவரை கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் கூறினார்.
பசுமாடு, கன்று எங்கே
இதனிடையே, மல்லசமுத்திரம் போலீஸில், கீதாவை கொன்றது நான்தான் என்று சொல்லி தனபால், சரணடைந்தார். அப்போது போலீசாரிடம் தனபால் கூறும்போது, "கடந்த 27ம் தேதி, எனக்கும், கீதாவுக்கும் தகராறு வந்தது.. பிறகு கீதா, கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.
அந்த நேரத்தில், கீதா வீட்டில் வளர்த்து வந்த பசுமாட்டையும், கன்றையும் விற்று விட்டேன். 2ம்தேதி ஊரிலிருந்து திரும்பி வந்த கீதா, பசுமாடு, கன்று எங்கே என்று கேட்டு, என்னிடம் தகராறு செய்தார்.. அப்போது ஆத்திரமடைந்து நான் கீதாவை தாக்கினேன்..
மண்டை உடைந்தது - துண்டு
மறுநாள் 3ம் தேதியும் எங்களுக்குள் சண்டை வந்தது,.. ஆவேசமடைந்த நான், கீதாவின் அவரது தலையை பிடித்து தரையில் மோதினேன்.. இதில் அவரது மண்டை உடைந்தது.. பிறகு துண்டு எடுத்து, கீதாவின் கழுத்தை நெரித்தேன்.. அவர் துடிதுடித்து இறந்து விட்டார்... பிறகுதான், அவரை தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை என்று பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைக்க முயற்சித்தேன்" என்றார்..
இதையடுத்து, தனபாலை கைது செய்த போலீசார், தற்போது சேலம் ஜெயிலில் அடைத்துள்ளனர்.. தாலி கட்டிய மனைவியின் தலையை பிடித்து, தரையில் மோதி மண்டையை உடைக்க வைத்து, பிறகு துண்டால் கழுத்தையும் நெரித்து கொன்ற இந்த பயங்கர சம்பவம், நாமக்கல்லில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications