நாமக்கல்லில் கல்யாணமான 3வது நாளில்.. பெண்ணுக்கு குழந்தைகள் இருப்பது அம்பலம்.. 2 கணவன்களுமே ட்விஸ்ட்
நாமக்கல்: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த 42 வயது பெண் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவரும், 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். இவர் முதல் திருமணத்தை மறைத்து நாமக்கல் என்ஜினியரை திருமணம் செய்துள்ளார். தற்போது 2 கணவர்களும் உதறியதால் வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார். எப்படி இவரது குட்டு அம்பலானது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. கணவரும், 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண் தனது குழந்தைகளையும், சிவந்திபுரத்தில் உள்ள தனது பெற்றோரின் பராமரிப்பில் விட்டு விட்டு சென்னையில் வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஐடி பெண் ஊழியருக்கு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தை சேர்ந்த 34 வயது என்ஜினியர் ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் அந்த என்ஜினியரிடம் பேசிய பெண், தனக்கு 30 வயது தான் ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறினாராம். ஒரு கட்டத்தில் முதல் திருமணத்தை மறைத்து பேசிய அந்த பெண்ணுடன் பொறியாளருக்கு காதல் ஏற்பட்டது.
இதையடுத்து தனது காதல் விவகாரத்தை பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் உள்ள பெற்றோரிடம் கூறி உள்ளார் அந்த பொறியாளர். பின்னர் ஒருவாறாக பெற்றோரை சமாதானம் செய்து அந்த பெண்ணை, ஐடி பொறியாளர் கடந்த நவம்பர் 30-ந் தேதி பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதில் மணமகன் வீட்டார் திரளாக கலந்து கொண்ட நிலையில், பெண் வீட்டார் சார்பில் பெயரளவில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் தங்களது திருமண விழாவில் எடுத்துக்கொண்ட போட்டோ, வீடியோக்களை மணமக்கள் இருவரும் பதிவிட்டனர். இதை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் முதல் கணவர், தனது உறவினர்கள் சிலருடன் நேராக சிவந்திபுரத்திற்கு சென்று அங்கு தனது மாமனார், மாமியாருடன் இருந்த மகனையும், மகளையும் அழைத்துக்கொண்டு பாண்டமங்கலத்திற்கு வந்துள்ளார்கள்.
அங்கு 2-வது கணவர் வீட்டுக்கு வந்து முதல் கணவர் தரப்பினர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். புதுப்பெண் தாக்கப்பட்டது குறித்து 2-வது மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள், வந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் புதுப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து 2 பிள்ளைகளும் உள்ளது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அனைவரும் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று நடந்த விவரங்களை கூறினர். அப்போது தன்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலியை புதுமாப்பிள்ளை பெற்றுக்கொண்டார். இருப்பினும் இதுவரை ரூ.5 லட்சம் வரை அந்த பெண்ணுக்காக செலவு செய்து ஏமாந்து விட்டதாகவும், இனி அந்த பெண் தனக்கு வேண்டாம் என்று அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றுவிட்டார்
2-வது திருமணம் செய்ததை பார்த்த முதல் கணவர், அந்த பெண் தனக்கும் வேண்டாம் என்றும், அவளது குழந்தைகளை அவளே வைத்துக்கொள்ளட்டும் என்றும் கூறிவிட்டு அந்த குழந்தைகளை போலீசில் ஒப்படைத்து விட்டு தனது உறவினர்களுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். தனது வில்லங்கமான ஆசையால் இரண்டு கணவர்களையும் இழந்து நிர்கதியாக நின்ற அந்த பெண்ணை குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரை இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications