நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி விழாவுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

Google Oneindia Tamil News

நாமக்கல்: கடையேழு வள்ளல்களில் ஒருவரான மாமன்னர் வல்வில் ஓரி விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று புதிய திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது.

புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கே.எஸ். ராஜ்கவுண்டர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:

PDK urges permission for Valvil Ori Vizha begins

தமிழக அரசின் சார்பாக ஆண்டு தோறும் ஆடி 17,18 இருநாட்களும் இலக்கியங்களும் புராணங்களும் போற்றக் கூடிய கொங்கு வேட்டுவக் கவுண்டர் இன மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரிக்கு அரசு விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் தளர்வுகள் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர், மாமன்னர் வல்வில் ஓரி அரசு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்து இருந்தார்.

வாடகைக்கு குடியிருப்போர் இருவருக்கு கொரோனா.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஓனர்.. போலீஸார் எச்சரிக்கைவாடகைக்கு குடியிருப்போர் இருவருக்கு கொரோனா.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஓனர்.. போலீஸார் எச்சரிக்கை

இந்த அறிவிப்பு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. எனவே எங்கள் புதிய திராவிட கழகத்தின் சார்பில் 10 நபர்கள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு இடம் ஒதுக்கி அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் விழா நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு ராஜகவுண்டர் தமது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

English summary
Puthiya Dravida Kazhagam has urged for Valvil Ori Vizha in Namakkal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X