சாலபாளையம் ஜல்லிக்கட்டு.. காளைகள் வாடிவாசல் தாண்டுமா? நாமக்கல் மக்கள் எதிர்பார்ப்பு
நாமக்கல்: நாமக்கல் சாலப்பாளையம் ஜல்லிக்கட்டுக்கு அரசு இதுவரை அனுமதி கொடுக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய திருவிழா. ஆண்டுதோறும் உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்து போன மக்களுக்கு, பொன்மணிகளாய் அறுவடைக்கு தள்ளி நிற்கும் நெல் பயிர் கொடுக்கும் புத்துணர்ச்சிக்கு அளவே இல்லை. எனவே அறுவடை திருவிழாவை கொண்டாடி மகிழும் தமிழர்கள், இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பொங்கலுக்கு முன்பு இருந்தே பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஆனால், நாமக்கல் சாலப்பாளையம் ஜல்லிக்கட்டுக்கு அரசு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இத தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக அவ்வூர் மக்கள் கூறியுள்ளனர். சாலபாளையம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்முறையாக நடத்த ஊர்பொதுமக்கள் திட்டமிட்டு சிறப்பாக விழா ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ளது.
போட்டிக்காக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து பணிகளும் முடிந்து கிட்டத்திட்ட 20 நாட்களுக்கும் மேலாகிறது. இருப்பினும் கூட மாவட்ட நிர்வாகம் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்த அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, வேம்பாகவுண்டன்புதூர், சேந்தமங்கலம், போடிநாயக்கன்பட்டி, கரட்டுப்புதூர், பண்ணகாரன்பட்டி, எருமப்பட்டி என அனைத்து ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு சாலபாளையம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என மக்கள் நம்பிக்கையாடு காத்துள்ளனர்.
சாலபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு உரிய அனுமதி கொடுக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications