20 ஏக்கர் கொடுத்தும் விடியவில்லை.. மேலும் சொத்து கேட்டு பெற்றோரை கூலிப்படை ஏவி வெட்டிய கொடூர மகன்!
நாமக்கல்: நாமக்கல் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாய்- தந்தையை வெட்டி விட்டு ஏரி அருகே அவர்களை வீசி சென்ற கொடூரம் நடந்துள்ளது.
மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி சரசு. இவர்களுக்கு பழனிவேல் என்ற மகனும் சுமதி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சபாபதி தான் சேர்த்து வைத்த 27 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கரை மகனுக்கும் 7 ஏக்கரை மகளும் எழுதி வைத்தார். ஆனால் அப்படியும் விடியாமல் சகோதரிக்கு கொடுத்த 7 ஏக்கரையும் தனக்கே மீண்டும் தர வேண்டும் என பெற்றோரை பழனிவேல் தொல்லை செய்தது தெரியவந்தது.
இதற்கு அவர்கள் சம்மதிக்காததால் சொந்த வீட்டை அவர்களிடம் இருந்து பறித்து கொண்டு விரட்டியடித்துள்ளார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வீட்டை மீட்டுள்ளனர். சொத்து கொடுக்காததாலும், வீட்டை மீட்டதாலும் பழனிவேல் கடும் கோபமடைந்தார்.
இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி பெற்றோரை கூலிப்படை ஏவி கடத்தி சென்ற பழனிவேல் அவர்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினார். இதையடுத்து கோனேரிப்பட்டி ஏரி அருகே சபாபதி மற்றும் சரசுவை அந்த கும்பல் வீசிவிட்டு சென்றது.
இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தம்பதியை மீட்டு ராசிபுரம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக பழனிவேல் உள்ளிட்ட கூலிப்படையினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications