தலைமை ஆசிரியை உடன் ஆர்டிஓ த*கொ*.. மகளின் காதலால் எடுத்த விபரீத முடிவு! வெளியான பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அரசு பள்ளி தலைமை ஆசிரியையான தனது மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மகள் திருமண விவகாரம் தொடர்பாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த தற்கொலை சம்பவம். திருச்சியில் பணியாற்றி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அரசு பள்ளி தலைமை ஆசிரியையுமான தனது மனைவியுடன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த தற்கொலை சம்பவத்தில் தான் பதைபதைக்க வைக்கும் பின்னணி வெளியாகி உள்ளது. நாமக்கல் தில்லைபுரம் பகுதியைச் சேர்ந்த 54 வயதான சுப்பிரமணி திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார்.

Namakkal crime police

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய அவர் கடந்த ஜனவரி மாதம் தான் திருச்சிக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பிரமிளா ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி, அவரது மனைவி பிரமிளா ஆகியோர் இன்று அதிகாலை நாமக்கல் அருகே வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இருவரது உடலையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர். சுப்பிரமணிக்கும் பிரமிளாவுக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மகனின் படிப்புக்காக வாங்கிய கடன் அதிகமானதால் சுப்ரமணியம் பிரமிளாவும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் வழக்கில் திடீர் திருப்பமாக தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது உயிரிழந்த சுப்பிரமணியனும், பிரமிளாவும் தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் அவரது மகளோ வேறு ஒருவரை காதலிப்பது ஆகவும் அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

எவ்வளவோ பேசியும் திருமணத்திற்கு அவரது மகள் சம்மதிக்காதால் வேதனையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாங்கள் பார்த்த வரனுடன் திருமணத்திற்கு மகள் ஒப்புக் கொள்ளாததால் தந்தையும் தாயும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Note: தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+