‘நான் ரெடி.. விஜய்யையும் கூப்பிட்டு வாங்க’; தவெக அருண்ராஜூக்கு கொங்கு ஈஸ்வரன் சவால்
நாமக்கல்: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் திமுகவை எதிர்க்க தொடங்கியுள்ளார். இதற்காக கொங்கு மண்டலத்தை குறிவைத்து பணியாற்றி வருகின்றனர். அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அருண்ராஜ், திமுக கூட்டணி கொங்கு ஈஸ்வரனை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருண்ராஜூக்கு ஈஸ்வரன் நேரடியாக சவால் விட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டுகிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டுகிறார்கள்.

திருச்செங்கோட்டில் அருண்ராஜ்
ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணி, ஆட்சியை பிடிக்க அதிமுக கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. தவெக சார்பில் அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் நாமக்கல் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏவாக கொங்கு ஈஸ்வரன் உள்ளார்.
இதுகுறித்து கொமதேக தலைவர் ஈஸ்வரன் நாமக்கலில் செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்றபோதுகூட நிறைய பேர் அவர்களின் கட்சியில் சேரப்போகிறார்கள் என்றனர். அப்படி யாராவது சேர்ந்தார்களா. ஊடகங்களிலும் நிறைய பேர் சேரப் போகிறார்கள், கோவை விமான நிலையத்தில் சேரப் போகிறார்கள், ஹோட்டலில் சேர்கிறார்கள் என்று கூறினார்கள். அப்படி யாரும் சேரவில்லையே." என்றார்.
ஈஸ்வரன் ரெடி
தவெக அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று சொல்லியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஈஸ்வரன், "அவர்கள் வாக்கை பிரிப்பது எனக்கு நல்லதுதான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. நல்லதுதான். சும்மா எல்லாம் இல்லை. நான் அண்ணாமலையையே விவாதத்திற்கு அழைத்தவன்.
நான் திருச்செங்கோட்டிற்கு அது செய்யவில்லை, இது செய்யவில்லை என்றார். அப்போது மேடை போட்டு நேருக்கு நேர் விவாதிக்கலாம் என்று அண்ணாமலையை அழைத்தேன். இப்போதுவரை அது அப்படியே நிற்கிறது. விவாதத்திற்கு நான் எப்போது வேண்டுமானால் தயாராக இருக்கிறேன். அதேபோல அருண்ராஜ் எப்போது வேண்டுமானாலும் விவாதத்திற்கு வரலாம்.
விஜய்யை கூப்பிடுங்க
முடிந்தால் விஜய், புஸ்ஸி ஆனந்தை அழைத்து வர சொல்லுங்கள். 234 தொகுதிகளையும் நாங்கள் கேட்கலாம். கூட்டணி குறித்து 4 சுவருக்குள் முதலமைச்சரிடம் தான் பேச முடியும். ஊடகங்களிடம் சொன்னால் நீங்கள் 4 சீட் வாங்கி கொடுப்பீர்களா. எங்கள் கட்சியின் கொள்கையே கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்ப்பதுதான். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி தான் எங்களின் கொள்கை.
விஜய் பேசுவதை பார்த்து பயப்பட வேண்டிய அதிமுக. திமுகவை தோற்கடிக்க அவர் வரவில்லை. அதிமுக இடத்தை பிடிக்கதான் தவெக முயற்சிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர், நள்ளிரவு மாற்றப்பட்டது ஏன். கோபிசெட்டிப்பாளையம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு, ஆத்தூர் பகுதிகளை தனி மாவட்டமாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளோம்.
மாவட்டங்களை பிரிக்க 100 கோடி ரூபாய் வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தனி மாவட்டங்கள் குறித்து அவரிடம் கேளுங்கள். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதலமைச்சர் அமைச்சரவையை கூட்டி முடிவு செய்வார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications