TVK Vijay: என்னமோ ஏதோனு நினைச்சேன்.. ஒரு கை பார்த்துடலாம் – விஜய் சவால்
நாமக்கல்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தலை முன்னிட்டு பரப்புரையை மேற்கொண்டுள்ளார். நாமக்கல்லில் பேசிய விஜய் நாமக்கல் மாவட்டத்தின் பெருமைகளை பேசி, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து பட்டியலிட்டார். வாக்குறுதிகள் தொடர்பாக நகைச்சுவையுடன் உதாரணங்களை அடுக்கியவர், ஒரு கை பார்த்துவிடலாம் என்று சவால்விட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் முதற்கட்டமாகவும், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாகவும் சுற்றுப்பயணம் செய்தார்.

இந்நிலையில், மூன்றாவது கட்ட சுற்றுப் பயணமாக நாமக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளார். நேற்று இரவு முதலே விஜயைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே நாமக்கல் மாவட்டத்தில் தவெக தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்கள் வரத் தொடங்கினர். கொளுத்தும் வெயிலிலும் வழக்கம்போல் விஜய்யை பார்ப்பதற்காக இளைஞர்களும், பெண்களும் அதிகளவில் திரண்டுள்ளனர்.
நாமக்கல் கே.எஸ் திரையரங்கம் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் தவெக தலைவர் விஜய் பேசும்போது, "புதுசா எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள். புதுசா அப்படி என்ன சொல்றது. எங்களுக்கு திமுக மாதிரி பொய் வாக்குறுதி கொடுக்க மாட்டோம். செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி திறப்போம், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை, வீட்டிற்குள் ஏரோபிளேன் விடுவோம் என்று முதலமைச்சர் சார் மாதிரி அடித்துவிடலாமா. நாங்கள் சாத்தியமானதை, செய்யக்கூடியதை மட்டுமே செய்வோம்.
திமுக மாதிரி பாஜகவுடன் திரைமறைவு கூட்டணி எல்லாம் வைக்க மாட்டோம். அதிமுக - பாஜக நேரடியாக கூட்டணியில் உள்ளனர். திமுக குடும்பம் பாஜக உறவுடன் அண்டர்டீலிங் வைத்துள்ளனர். கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி பாஜகவுடன் எப்போதும் கூட்டு இல்லை. திமுகவுக்கு ஓட்டு போட்டால் பாஜகவுக்கு ஓட்ட போட்ட மாதிரி தான். வெளியில் அடித்துக் கொள்வார்கள். இருவரும் ஒன்று தான். யோசியுங்கள் மக்களே.
அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு ஜெயலலிதா மேடம் என்று சொல்லிய எதையும் பின்பற்றாமல், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி என்று மக்களே நேரடியாக கூறுகிறார்கள். வருகிற தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி. நண்பா.. நண்பி.. தோழா.. தோழி என் மீது நீங்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்களா. பார்த்துடலாம். ஒரு கை பார்த்துடலாம். நானும் என்னமோ ஏதோ என்று நினைத்தேன். பார்த்துவிடலாம். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்." என்றார்.
-
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்












Click it and Unblock the Notifications