தவெகவின் முதல் வேட்பாளர் இன்று அறிவிப்பா? மறுத்த புஸ்ஸி ஆனந்த்! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார் என்றும் திருச்செங்கோடு கூட்டத்தில் வைத்து வேட்பாளர்கள் அறிவிப்பு என்று பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Bussy Anand

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வைத்து தவெகவின் முதல் வேட்பாளர் யார் என்பதை விஜய் காணொலி மூலம் அறிவிப்பார் என தகவல்கள் வெளியானது. அதிலும் முதல் வேட்பாளர் அருண்ராஜ் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் பேசியபோது: தவெக வேட்பாளரை விஜய் தான் அறிவிப்பார். 234 தொகுதிகளிலும் வேட்பாளர் விஜய் முகம் தான். தமிழக மக்களுக்காக உச்சத்தை விட்டு வந்துள்ளார் விஜய். எனவே இன்றைய தினம் வேட்பாளர் அறிவிப்பு என்ற தகவலில் உண்மையில்லை.

நம் தொண்டர்கள் யாரும் பணக்காரர்கள் இல்லை. ஆனால் பட்டினி தினம் என வந்துவிட்டால் 2000 பேருக்கு உணவளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+