மாதொருபாகன் நாவலுக்கும் கோகுல்ராஜ் கொலைக்கும் என்ன தொடர்பு? 2015 ஜூன் 23ல் யுவராஜ் அங்கு வர காரணம்?
நாமக்கல் : கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட 2015 ஜூன் 23ஆம் தேதி தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ், திருச்செங்கோட்டுக்கு வந்ததற்குக் காரணம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' புத்தகம் தான்.
தமிழ்நாட்டையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து இன்று தீர்ப்பளித்தது. குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது வகுப்புத் தோழியுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தனது தோழியை சந்திப்பதற்காக நாமக்கல் வந்துள்ளார். முன்னதாக தனது செல்போன் பழுதடைந்துவிட்டதாக கோகுல்ராஜ் கூறவே, அதற்காக பணம் தருவதற்காகவே அவரை அப்பெண் அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் நேரில் சந்தித்தபோது இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அப்பெண் கோகுல் ராஜிடம் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் திருச்செங்கோடு மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அதற்கு அடுத்த நாள் தொட்டிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
திருச்செங்கோடு மலையில் நடைபெற்ற சம்பவமே கோகுல்ராஜ் கொலைக்குக் காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டையே உலுக்கிய கோகுல் ராஜ் ஆணவக் கொலை சம்பவத்தில் தான் தற்போது தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோகுல் ராஜ் மற்றும் அவரது தோழி இருவரும் திருச்செங்கோடு மலை மீதுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் அப்பெண்ணிடமும் கோகுல்ராஜிடமும் விசாரித்துள்ளனர். அப்பெண்ணின் முகவரியை எழுதிக் கேட்டுள்ளனர்.
இதில் அப்பெண்ணின் சாதி விவரம் தெரியவரவே, கோகுல்ராஜிடம் விசாரித்துள்ளனர். அவர் பட்டியல் இனத்தவர் என்று தெரிந்ததும் இருவரின் செல்போன்களையும் பறித்துவிட்டு பெண்ணை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். மறுநாள் தொட்டிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கோகுல்ராஜ் கண்டெடுக்கப்பட்டார்.

கோகுல்ராஜுடன் மலைக்கு வந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு அந்தப் பெண்ணும், கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது என பிறழ் சாட்சியாக மாறினார். கோகுல்ராஜின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கு தனி மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கூறி பார்த்திபன் என்ற வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் சம்பத்குமாரை நியமித்து உடற்கூராய்வு நடத்தப்பட்டது.
அவர்தான், இது தற்கொலை அல்ல, இது ஒரு கொடூரமான கொலை எனக் குறிப்பிட்டார். அதன் பின்னர்தான் வழக்கு திசை மாறியது. இதன் பின்னர் யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திருச்செங்கோடு மலைக்கு யுவராஜ் சென்று வந்த சி.சி.டி.வி காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் யுவராஜ் அளித்த பேட்டி என தொழில்நுட்ப ஆதாரங்களே நீதிமன்றத்தில் சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டன.
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட அன்று, யுவராஜ் அன்று திருச்செங்கோட்டுக்கு வந்ததற்குக் காரணம் 'மாதொருபாகன்' எனும் புத்தகம் தான். எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' நாவலில், யுவராஜ் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி அந்த நாவலுக்குத் தடை கோரியும் பெருமாள் முருகனை கைது செய்யக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது யுவராஜின் தீரன் சின்னமலை பேரவை.
கோகுல்ராஜை யுவராஜ் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைத்து மிரட்டிய சம்பவம் நடைபெற்றபோது, அன்றைக்கு எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேப்பதற்காகவே திருச்செங்கோட்டுக்கு வந்துள்ளார். அப்போதுதான் யுவராஜ், திருச்செங்கோடு மலைக்கு வந்துள்ளார்.
யுவராஜ் அவர்கள் இருவரிடமும் முகவரி கேட்டு, அந்தப் பெண்ணின் சாதியை கண்டறிந்து, கோகுல்ராஜ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்துகொண்டு, இருவரின் செல்போனையும் பிடுங்கிக்கொண்டு அந்தப் பெண்ணை மட்டும் அனுப்பி வைத்தனர். பின்னர், கோகுல்ராஜை அடித்துக் காயப்படுத்தி சங்கிலியால் கழுத்தை இறுக்கி அவர் தற்கொலை செய்துகொள்வது போல ஜோடித்து, பின்னர், அவரது தலையை சிதைத்து ரயில்வே தண்டவாளத்தில் உடலைப் போட்டுள்ளனர். இந்தத் தகவலை கோகுல்ராஜ் தரப்பின் வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications