கள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட பிரியா... அப்புறம் நடந்தது திடீர் திருப்பம்
நாமக்கல்: கள்ளக்காதல் கொலைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. இடைஞ்சலாக இருக்கும் பிள்ளைகளை ஈவு இரக்கமின்றி கொள்வது, கணவன் தலையில் கல்லைப்போட்டு கொல்வது என்று இருந்த நிலையில் கணவனுக்கு பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கள்ளக்காதலனுடன் கொலை செய்த முயற்சி செய்தார் ஒரு பெண். விழித்துக்கொண்ட கணவன் அங்கிருந்து தப்பி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே, அந்த பெண்ணையும், கொலை செய்ய உதவியாக இருந்த நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உயிர் தப்பிய நபரின் பெயர் முருகேசன் என்பதாகும். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போத மலை அடிவாரத்தில் உள்ள ஜெ.ஜெ காலனியில் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு பிரியா என்ற மனைவியும் 10 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
பெயர்தான் பிரியாவே தவிர கணவன் மீது கொஞ்சமும் பிரியமில்லை என்றுதான் கூற வேண்டும். முருகேசன் வேலைக்கு போன நேரத்தில் பிரியா வீட்டில் தனியாக இருந்து வந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுதம் ராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

தனிமையில் உல்லாசம்
நட்பாக பழகிய இவர்களின் தொடர்பு எல்லை மீறியது. கணவன் வேலைக்கு போன பின்னர் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இது அரசல் புரசலாக முருகேசனுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்தார்.

சண்டை போட்ட கணவன்
கணவன் மனைவி இது குறித்து பலமுறை தகராறு நடந்துள்ளது. கள்ளத்தொடர்பை விட்டு விடுமாறு கூறியும் பிரியா கைவிடுவதாக இல்லை. இதனால் அடித்து திருத்தலாம் என்று நினைத்தார் முருகேசன். தனது சந்தோசத்திற்கு இடைஞ்சலாக இருந்த கணவனை கொலை செய்ய பிரியா திட்டமிட்டார்.

கொலை செய்ய திட்டம்
கவுதம் ராஜ் உடன் சேர்ந்து கணவன் முருகேசனை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டார் பிரியா. ஞாயிறுக்கிழமை மட்டன் சாப்பிட்டு விட்டு உறங்கப்போன முருகேசனுக்கு பாலில் தூக்கமருந்து கலந்து கொடுத்தார். அசந்து தூங்கி நேரத்தில் கத்தியுடன் தயாராக இருந்த கவுதம்ராஜ் கொலை செய்ய முயற்சி செய்த போது, முருகேசனுக்கு விழிப்பு வந்து விட்டது.

காவல்நிலையத்தில் தஞ்சம்
சுதாரித்துக்கொண்ட முருகேசன், இருவரையும் தள்ளிவிட்டு விட்டு தப்பி ஓடினார். நேராக ராசிபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்தார்.
தன்னை கொலை செய்ய திட்டம் போடுவதாக மனைவி மீதும் கவுதம் ராஜ் மீதும் புகார் கொடுத்தார் முருகேசன். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கே கத்தியோடு இருந்த கவுதம் ராஜையும், கணவனை கொல்ல முயன்ற பிரியாவையும் கைது செய்தனர். கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றினர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்ய முயன்று கடைசியில் சிறைக்கு போய் கம்பி எண்ணுகிறார் பிரியா.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications