இதுவரை ருசிக்காத ஸ்பெஷல் தீபாவளி பண்டங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டுமா?
500 கிலோ மட்டுமே தயாரிக்கப்படும் தித்திக்கும் பெண் பனைக் கருப்பட்டி பலகாரங்கள், இது நம்ம ஊர் தீபாவளி ஸ்பெஷல்.
Recommended Video
தமிழர் தினசரி வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன கருப்பட்டி இனிப்புகள். கால் உடைந்த கட்டு சேவலுக்கு கருப்பட்டி தண்ணி கொடுப்பது முதல் பிறந்த குழந்தைக்கு கருப்பட்டி தண்ணீர் கொடுப்பது வரை நமக்கான இனிப்புத் தேவையினை தினசரி பூர்த்தி செய்து வந்தது கருப்பட்டி தான்.

ஆனால் இன்று குறைந்து விட்ட பனை மரங்களின் எண்ணிக்கை, அதிகப்படியாக மார்க்கெட்டில் வந்து விட்ட டூப்ளிகேட் கருப்பட்டி இனிப்புகள் போன்ற காரணத்தால் இந்த ஒரிஜினல் கருப்பட்டி இனிப்பு செய்யும் முறை தனது பொலிவினை இழந்து நிற்கிறது
இதனைப் பற்றி இந்த வகை இனிப்புகளை பாரம்பரியமாக செய்து வரும் திரு. மைதீன் அவர்களிடம் கேட்ட பொது "எங்களது தாத்தா காலத்தில் இருந்து இதனைச் செய்து வருகிறோம், அதீத உடல் நலன்களைத் தரக் கூடிய கருப்பட்டியினை எந்த கலப்படமும் இன்றி லாவகமாகச் சேர்த்து நல்ல பதத்தில் இனிப்புகளை செய்யும் முறையினை காலம் காலமாகக் கையாண்டு வருகிறோம். ஆனால் இன்று எளிமையாக வெள்ளை சர்க்கரை சேர்த்து ஒரு பதத்தில் கருப்பட்டி இனிப்பு என்று கூறி விடுகின்றனர். இதனால் அவர்களின் விலை அளவிற்கு எங்களால் ஒரிஜினல் கருப்பட்டி இனிப்புகள் தர இயலாமல் உள்ளது. ஆனால் ஒரிஜினல் கருப்பட்டி இனிப்புகளை ருசித்தவர்கள் கட்டாயம் அதனைத் தேடி மீண்டும் வாங்கி ருசிக்கின்றனர்" என்கிறார்.
கருப்பட்டியின் வரலாறு, அதன் உடல் நலன் தரவல்ல சிறப்பு ஆகியவற்றை உணர்ந்து ஒரிஜினல் கருப்பட்டி இனிப்புகளை இன்று மெல்ல பொது பயனுக்கு கொண்டு வந்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல் இணையம்.
இதன் ஒரு பகுதியாக தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஸ்பெஷலாக பெண் பனை மரங்களில் இருந்து இறக்கும் தெளுவினை சேகரித்து, தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன்பு கருப்பட்டியினை எடுத்து அதீத ருசியான ஸ்பெஷல் கருப்பட்டி இனிப்புகளை இம்முறை செய்துள்ளது நேட்டிவ்ஸ்பெஷல் இணையம்.
ஆண் பனை வருடம் முழுவதும் பூக்கும் ஆனால் அதில் செய்யும் கருப்பட்டியில் ருசி இருக்காது பெண் பனை புரட்டாசி மற்றும் சித்திரை மாதங்களில் மட்டுமே பூக்கும் ஆனால் அதன் ருசி அதீதமானது, . சரியாக தீபாவளிக்கு முன்பு இதன் சீசன் என்பதால் ஓரளவுக்கு தெளுவு இறக்க முடியும்.
இதனை சரியான பதத்தில் இறக்கி கருப்பட்டி மைசூர்பாக், கருப்பட்டி முந்திரி கேக், கருப்பட்டி தொதல், கருப்பட்டி அல்வா போன்ற கருப்பட்டி இனிப்புகள் இந்த தீபாவளிக்கு அபரிமிதமான ருசியில் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரிஜினல் பெண் பனைக் கருப்பட்டி இனிப்பினை நேட்டிவ்ஸ்பெஷல் இணையம் தங்களது தீபாவளி கிப்ட் பாக்ஸ் வகைகளில் சேர்த்து 500 பாக்ஸ் மட்டும் விற்பனை செய்ய உள்ளது.
பெண் பனை மரத் தெளுவு கிடைப்பது குறைவு என்பதால் 500 இனிப்பு பாக்ஸ் மட்டும் இந்த ஸ்பெஷல் கருப்பட்டி ஸ்வீட் பாக்ஸாக வழங்கப் படுகிறது. இது போன்று மறைந்து வரும் பாரம்பரிய தமிழர் பண்டங்களை மீண்டும் அரியணை ஏற்றும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

இந்த கருப்பட்டி ஸ்வீட் பாக்ஸ் இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு மட்டும் முதல் 500 புக்கிங் மட்டும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் ஆர்டர் செய்யலாம். இந்தியா மட்டும் அல்லாது அமெரிக்கா, ஐரோப்பா, அமீரகம் மற்றும் சிங்கப்பூரில் இருந்தும் ஆர்டர் செய்யலாம்.
இந்த தீபாவளியினை மிகச்சிறந்த முறையில் நம்ம ஊர் பாரம்பரிய இனிப்புகளுடன் கொண்டாட நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் உள்ள ருசி மிகுந்த கருப்பட்டி இனிப்பு பெட்டகங்களுடன் பிற பார்மபரிய இனிப்பு வகைகளையும் சிறப்பு விலைக்கு ஆர்டர் செய்து ருசித்து மகிழுங்கள்.
இது தவிர நிறுவனங்கள் மற்றும் மொத்த ஆர்டர்களுக்கு [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி விவரங்கள் பெறலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக

















Click it and Unblock the Notifications