அவசரம்.. இதய நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை.. உயிர் பிழைக்க உதவி செய்யுங்கள்
தருமபுரி: பிறந்து 6 மாதமே ஆன குழந்தை ஷாஸ்திக்-கிற்கு இதய பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை சரி செய்ய அவனுக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இந்த ஆபரேஷனுக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்..
தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகே உள்ள ஆத்துமேடு பகுதியை சேர்ந்த தம்பதி சதீஷ் குமார் - நிவேதா. சதீஷ் குமார் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சதீஷ்குமார் - நிவேதா தம்பதிக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து ஷாஸ்திக் பிறந்தான்.
ஷாஸ்திக் பிறந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே ஷாஸ்திக்கிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதயத்துடிப்பும் அதிகமாக இருந்தது. இதைப்பார்த்த ஷாஸ்திக்கின் தாயான நிவேதா பதற்றம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாஸ்திக்கிற்கு இருதய பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிறந்த 15 நாளே ஆன ஷாஸ்திக்-கிற்கு இருதய பாதிப்பு இருந்தது தெரியவந்ததால் பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பதும் வருவதுமாக பெற்றோர்கள் இருந்தனர். 6 மாதம் கழித்தே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். தற்போது ஷாஸ்திக் பிறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. ஷாஸ்திக்-கிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மியாட் மருத்துவமனை தெரிவித்தனர்.

இருந்தாலும் இந்த நடைமுறைகளுக்காக ஷாஸ்திக் உடல் எடை கொஞ்சம் அதிகரிக்க வேண்டியுள்ளது. ஷாஸ்திக் பிறவி இருதய குறைபாடான Large perimembraneous VSD/Small ASD/Hyperkinetic PAH/ பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறான். ஷாஸ்திக்கிற்கு ஆரம்பகால அறுவை சிகிச்சையான VSD Closure + ASD closure செய்யப்பட வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. அதாவது அறுவை சிகிச்சை, மருத்துவமனை வாடகை, மருந்துகளுக்காக மொத்தம் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏழை குடும்பம் என்பதால் ஷாஸ்திக் கின் குடும்பத்தினரால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியவில்லை. எனவே நீங்கள் நினைத்தால் இந்த குழந்தைக்கு உதவி செய்ய முடியும். அதோடு உடனே ஆபரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து, இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ்.
குழந்தைக்கு உதவி செய்ய Click Here
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications