இனி பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக தப்பு செய்ய அஞ்சணும்:சைபர் குற்றங்கள் மத்திய அரசின் புதிய திட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பற்றி புகார் தர தனி போர்ட்டல் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் சைபர் குற்றங்களுக்காக பண மோசடிகள் பற்றி உடனே புகார் அளிக்க தனி தொலைபேசி எண்கள் அமைக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களை திட்டமிட்ட ஒருங்கிணைப்பின் மூலம் எதிர்கொள்ளும் வகையில் 'இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம்' ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது என திமுக எம்.பி கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கலந்துக்கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு, நாட்டில் அதிகரித்துவரும் சைபர் குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்து மூலமாக பதிலளித்தார். அவர் அளித்த பதில் வருமாறு:

சைபர் குற்றங்கள்
காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், சைபர் குற்றங்களைத் தடுக்கவும், அக்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை.

சைபர் ஒருங்கிணைப்பு மையம்
ஆனாலும் இந்த விஷயத்தில் விசாரணை அமைப்புகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு வகைகளில் மாநில அரசுகளுக்கு உதவி வருகிறது. அதன்படி, சைபர் குற்றங்களை திட்டமிட்ட ஒருங்கிணைப்பின் மூலம் எதிர்கொள்ளும் வகையில் 'இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம்' ஒன்றை மத்திய அரசு நிறுவியிருக்கிறது. அத்துடன் டெல்லி துவாரகாவில் 'தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம்' ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரனை நடத்தும் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற இதுவரை சுமார் எட்டாயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள் . 1800 பேர் பயிற்சியை நிறைவு செய்திருக்கிறார்கள்.

புகார் அளிக்க நாடு தழுவிய இணையவழி போர்ட்டல்
சைபர் குற்றங்கள் நிகழ்ந்தால் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இந்தவகை குற்றங்கள் நிகழ்ந்தால், அவர்கள் எந்தவித தயக்கமோ தடையோ இல்லாமல் புகார் அளிக்க தனியாக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.cybercrime.gov.in இந்தப் போர்ட்டலில் புகார் பெறப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட மாநில அரசே விசாரணையைத் தொடரும்.

பண மோசடிக்கு தனிப்பிரிவு
இதுதவிர பணமோசடிகள் பற்றிய புகார்களை உடனடியாகத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ( 155260 ) செய்து தரப்பட்டிருக்கிறது. அத்துடன், நாட்டை ஏழு பகுதிகளாகப் பிரித்து சைபர் குற்றங்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து ஏழு பிரத்யேக ஒருங்கிணைப்புக் குழுக்கள் அப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தடயவியல் ஆய்கங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்ற விசாரணைகளை விரைவுபடுத்த பயிற்சியுடன் கூடிய தடயவியல் ஆய்வகங்கள் 28 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதிலளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications