கேள்வி கேட்டது ஒரு குத்தமாய்யா.. பெரிய பட்டியலையே வாசித்த மகள்.. நொந்து நூடுல்ஸ் ஆன அப்பா!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்ன வேண்டும் என கேட்ட தந்தையிடம், ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 26 பொருட்களை கேட்டு அதிர வைத்துள்ளார் 10 வயது சிறுமி.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்ன வேண்டும் என கேட்ட தந்தையிடம், ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 26 பொருட்கள் அடங்கிய ஒரு பெரிய லிஸ்ட்டை கொடுத்து அதிர வைத்துள்ளார் 10 வயது மகள் ஒருவர்.

உலகம் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவின் போது, தங்கள் குழந்தைகள் கேட்டும் பொருட்களை பரிசளிப்பது பெற்றோரின் வழக்கம்.

10 years old girls christmas wish list goes viral

அந்த வகையில் ஜான்சன் என்பவர் தனது 10 வயது மகளிடம், உனக்கு வேண்டிய பொருட்கள் என்ன என கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி ஒரு பெரிய பட்டியலையே கொடுத்து அதிர வைத்துள்ளார்.

சிறுமி கொடுத்த பட்டியலில், லேட்டஸ்ட் ஐ போன், ஆப்பிள் மேக்புக், ஆப்பிள் ஏர் போட்ஸ், விலை உயர்ந்த கேண்ட் பேக், செருப்பு, நிஜ முயல், அதற்கு உடைகள், அதை துவைப்பதற்கு சோப்புதூள் என மொத்தம் 26 பொருட்களை கேட்டுள்ளார் அந்த சிறுமி. இதன் மொத்த மதிப்பு ரூ.7.5 லட்சமாம்.

தனது மகள் எழுதிக் கொடுத்த பட்டியலை டிவிட்டரில் பதிவிட்டார் ஜான்சன். அதனை 23,000 பேர் ரீடிவீட் செய்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதனை லைக் செய்துள்ளனர்.

ஜான்சன் மகளின் கிறிஸ்துமஸ் விருப்பப் பட்டியல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இவ்வளவு காஸ்லியான பொருட்களை கேட்பாள் என தெரிந்திருந்தாள் மகளிடம் என்ன வேண்டும் என கேட்டே இருக்க மாட்டார் ஜான்சன். அந்த பட்டியலில் உள்ள பொருட்களில் உங்களுக்கு தேவையானது ஏதாவது இருக்கான்னு பார்த்து சொல்லுங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+