ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல்
நியூயார்க்: அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் வெள்ளையர் இன முதியவரை போலீசார் கீழே தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து முதியவரை கீழே தள்ளிவிட்ட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் படுகொலைக்குப் பின் மிகப் பெரும் கிளர்ச்சி நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் கறுப்பர் இன மக்களுக்கு எதிரான அத்தனை ஒடுக்குமுறைகளுக்கு நீதி கேட்கும் வகையில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.
கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீசாரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்தால்தான் இப்போது அமெரிக்காவின் அத்தனை நகரங்களுமே பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

தொடர் போராட்டங்கள்
கறுப்பர் இன மக்களின் நியாயமான இந்த போராட்டங்களுக்கு முன் வெள்ளையர் இனத்தவரும் பெருந்திரளாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போனது. அமெரிக்கா அதிபர் டிரம்ப்கூட, வெள்ளை மாளிகையில் பங்கரில்தான் பதுங்கி இருக்கிறார் என செய்திகள் வெளியாகி இருந்தன.

போராட்ட முழக்கமான இறுதி சொல்
மரணிப்பதற்கு முன்னதாக ஜார்ஜ் ஃப்ளாய்ட் பயன்படுத்திய சுவாசிக்க முடியவில்லை என்ற சொல், இப்போது போராட்ட முழக்கமாக மாறி இருக்கிறது. எங்களால் உரிமையை- ஜனநாயகாத்தை சுவாசிக்க முடியவில்லை என்கிற முழகம் அமெரிக்கா தேசம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இடைவிடாத போராட்டங்கள் தொடருகின்றன.

வன்முறை போராட்டங்கள்
இந்த போராட்டங்கள் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்திருக்கின்றன. செயின்ட் லூயிஸ் நகரில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த 4 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அமைதிவழி போராட்டங்கள் வன்முறையை நோக்கிச் செல்வது அங்கு பேரச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Recommended Video

மூர்க்கத்தனமான போலீசார்
இந்நிலையில் நியாகரா சதுக்கத்தில் நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் வெள்ளையர் இன முதியவர் ஒருவர் போலீசாரால் கீழே தள்ளிவிடப்பட்டார். அவர் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பப்பல்லோ நகரைச் சேர்ந்த போலீசார்தான் இந்த மூர்க்கத்தனமான செயலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாக பப்பல்லோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications