3 குழந்தைகள் பெற்றும் குறையாத அழகு.. பொறாமையில் பொசுங்கிய மாஜி காதலன்.. அடுத்து நடந்த கொடுமை!
கர்ப்பிணி பெண்ணின் சடலம் ப்ரிட்ஜில் இருந்து மீட்கப்பட்டது
நியூயார்க்: 3 குழந்தைகளுக்கும் தாயாகியும் குறையாத அழகினை கண்டும், தனக்கு கிடைக்காத காதலி இனியும் சந்தோஷமாக இருக்க கூடாது என்ற பொறாமையாலும், முன்னாள் காதலன் இப்படி ஒரு கொடூர முடிவை எடுத்துவிட்டார்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண் செலினா ஆன்... கல்யாணமானவர்.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இப்போது 3வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் செலினா.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் செலினாவை காணவில்லை.. இதனால் பதறி போன குடும்பத்தினர் பல இடங்களில் செலினாவை தேடினார்கள்.. எங்கேயும் கிடைக்கவில்லை.. அதனால் போலீசில் சென்று புகார் தந்தனர்.
அந்த புகாரின்பேரில் போலீசாரும் செலினாவை தேடி வந்தனர்.. அவரது செல்போன் நம்பரையும் டிரேஸ் செய்து பார்த்தனர்.. எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. விசாரணையின்போதுதான் செலினாவுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவந்தது.. அவர் பெயர் வில்லியம் ஜேம்ஸ்.
கல்யாணத்துக்கு முன்பு செலினாவும் அவரும் பல இடங்களில் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடந்த திங்கள் கிழமை செலினாவின் முன்னாள் காதலனின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.. அங்குள்ள ரூம்களில் தேடி பார்த்தும் செலினா இல்லை.. இறுதியாக கிச்சனுக்கு சென்று அங்கிருந்த ஃப்ரிட்ஜை டக்கென திறந்தனர்.
அப்போது செலினாவின் சடலம் பொத்தென்று ஃப்ரிட்ஜில் இருந்து விழுந்தது.. செலினாவின் கழுத்து, முகத்தில் ஏராளமான காயங்கள் இருந்தன.. மிக கொடூரமாக கொன்று பிரிட்ஜில் பிணத்தை வைத்திருந்தார் வில்லியம் ஜேம்ஸ்.. இதை பார்த்து ஷாக் ஆன போலீசார் ஜேம்ஸை கைது செய்தனர்.
செலினா தனக்கு கிடைக்காத காரணத்தினால் இவ்வாறு கொலை செய்ததாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.. எனினும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்றில் சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்ணின் மரணம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications