• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பேராபத்து".. எல்லாரும் சாக போறாங்க.. சுனாமி வரபோகுது.. நெருங்குகிறதா டைம்.. கலங்கடித்த 3 கணிப்புகள்

60 நாட்களுக்குள் உலகப்போர் நடந்து மிகப்பெரிய மரணங்கள் ஏற்பட போகிறதாம்
Google Oneindia Tamil News

நியூயார்க்: டிசம்பர் மாதத்தை உலக மக்கள் எட்டிவிட்ட நிலையில், மொத்தம் 3 விதமான "கணிப்புகள்" பொதுமக்களை கலங்கடித்து கொண்டிருக்கின்றன.. அவைகள் என்னென்ன?

பொதுவாக வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே ஒருசிலர் கணித்து சொல்லி வருகிறார்கள்.. குறிப்பாக ஒரு வருடத்தின் இறுதிநாட்களில், இதுபோன்ற கணிப்புகள் வெளியாகி உலக மக்களை கதிகலங்க வைத்துவிடும்.

அந்தவகையில், இந்த வருடமும் கணிப்புகள் வெளியாகின.. மொத்தம் 3 வகையான கணிப்புகள் வெளியாகின.. இதில் முதன்மையானவர் பாபா வாங்கே என்பவர். இவர் கணித்து வைத்துவிட்டு போன எத்தனையோ விஷயங்கள் அச்சுஅசலாக அப்படியே நடந்து வருகின்றன.

ஏலியன் தாக்குதல்கள், அணு உலை வெடிப்பு.. 2023-ம் ஆண்டு கதி கலங்க வைக்கும்.. பாபா வங்காவின் கணிப்பு ஏலியன் தாக்குதல்கள், அணு உலை வெடிப்பு.. 2023-ம் ஆண்டு கதி கலங்க வைக்கும்.. பாபா வங்காவின் கணிப்பு

 தோலின் நிறம்

தோலின் நிறம்

2023- ம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மாற்றம் ஏற்படுமாம்.. உலகில் உள்ள அணு உலை உருகுவதால் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறுகிறார். இதன் காரணமாக பூமி பல பேரழிவுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.. அதிக கதிர்வீச்சுக்களை ஏற்படுத்தக் கூடிய சூரிய புயல் ஏற்படும்.. ஆய்வகங்களில் குழந்தைகள் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள் வெளிப்படும்.. பிறக்கப்போகும் தங்கள் குழந்தைகளின் குணநலன்கள் எப்படி இருக்கும், தோல் நிறம் எப்படி இருக்கும் என்பது முதல் கொண்டு பெற்றோர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்..

ஏலியன்ஸ்

ஏலியன்ஸ்

இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது தடை செய்யப்படும். வாடகைத்தாய் முறையும் முடிவுக்கு வரும். வரும் காலத்தில் ஆய்வகத்தில் பிறக்கும் குழந்தைகளே குடிமக்களாக இருக்கும்.. வேற்றுக் கிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இதனால், லட்சக்கணக்கானவர்கள் பலியாக நேரிடலாம். வல்லரசு நாடுகள் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது. 2028 ம் ஆண்டில் வெள்ளி கிரகத்தில் மனிதர்கள் காலடி எடுத்து வைப்பார்கள் என்று பாபா வாங்கா தெரிவித்துள்ளார்.. அதேபோல இதுபோன்ற கணிப்புகளை கூறுவதில், மிக முக்கியமானவர் கியூபாவை சேர்ந்த மோனி விடன்ட்டே என்ற பெண்மணி.. இதுவரை இவர் என்னவெல்லாம் கணித்துசொன்னாரோ, அது பெரும்பாலும் அப்படியே நடந்துள்ளது.

உலகப்போர்

உலகப்போர்

இவர் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தார்.... அதில், மீண்டும் மூன்றாம் உலகப்போர் குறித்து கூறியிருந்தார். மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக நடக்க போகிறது.. 9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும்... அதற்கு முக்கிய காரணமாக சீனாவாகத்தான் இருக்கும்.. சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லரசாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும், அதன்காரணமாகவே உலகப் போரை தூண்டிவிடும்.. இந்த உலகப்போரில், குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துவிழும், உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்" என்று மோனி கணித்து கூறியிருந்தது உலக நாடுகளை கலங்கடித்து கொண்டிருக்கிறது..

 பாபா வங்கா

பாபா வங்கா

இந்த பீதியே இன்னும் அடங்கவில்லை.. அதற்குள் இன்னொரு பகீர் கிளம்பியது.. நாஸ்டர்டாமஸ் என்பவர் எழுதி வைத்த கணிப்புதான் கடந்த மாதத்தில் இருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. உலகம் முடியும் வரைக்குமான தன்னுடைய கணிப்புகளை எழுதி வைத்தவர்தான் இந்த நாஸ்டர்டாம்ஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.. இவர் என்ன சொன்னாலும், அதை உலகம் அப்படியே உற்று கவனிக்கும்.. 465 வருஷங்களுக்கு முன்பு தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.. உலகில் எப்போது, என்னென்ன நடக்க போகின்றன என்பதை குறிப்பிட்டுள்ளார்.. அதுவும் அவைகளை எல்லாம் கவிதையிலேயே எழுதி வைத்துவிட்டு போயுள்ளார்..

 டயானா

டயானா

அமெரிக்கா இரட்டை கோபுரத் தாக்குதல், ஜான் கென்னடி கொலை, ஹிட்லரின் எழுச்சி, மரணம், டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது இப்படி ஏகப்பட்ட விஷயங்களை மிக மிக துல்லியமாக கணித்து சொல்லியவர் இவர்தான். நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பற்றிகூட இவர் எழுதி வைத்திருக்கிறார்.. அதாவது, "3 பக்கமும் கடல் சூழ்ந்த நாட்டில், பலத்த அதிகாரம்கொண்ட பெண் ஒருவர், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால், அதிகாரத்தை மறுபடியும் பெறுவார்... ஆனால், தன்னுடைய சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே தன்னுடைய 67-ம் வயதில் கொல்லப்படுவார்...நூற்றாண்டு முடிய 16 வருடங்கள் இருக்கும்போது இது நடக்கும்"

 விண் கற்கள்

விண் கற்கள்

நாஸ்ட்ர்டாம்ஸ் இப்டி கணித்து எழுதி வைத்திருந்ததை கேள்விப்பட்டு, இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே அதிர்ந்துதான் போனது.. அந்தவகையில், கடந்த மாதம் நாஸ்ட்ராடாமஸ் கணித்த இன்னொரு கணிப்பு வட்டமடித்தது.. 2022ல் பூமியை அடுத்தடுத்து விண்கற்கள் தாக்க போகின்றன என்றும், முழுக்க முழுக்க நெருப்பால் ஆன விண்கற்கள் பூமியை தாக்கும் என்றும், இதனால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும் என்றும் இவர் எழுதி வைத்திருக்கிறாராம்.

 உடையும் கோள்கள்

உடையும் கோள்கள்

அதுமட்டுமல்ல, "2022ம் ஆண்டில், வானத்தில் அரிய நிகழ்வு ஒன்று நடக்க போகிறது, ஒரு கிரகத்தில் இருந்து உடையும் சிறுகோள், அதிக வேகத்தில் வந்து பூமியை அடுத்த வருடம் தாக்க உள்ளது.. அந்த சிறுகோள், பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து கடலில் விழும், அந்த சிறுகோளின் அளவு மிகப்பெரியதாக இருக்கும் என்பதால் கடலில் வலுவான அலைகள் எழுந்து சுனாமியை உருவாக்கும், அதனால், கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளின் கரையோரப் பகுதி முற்றிலுமாக அழிந்து, லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழப்பார்கள்" என்று கணித்துள்ளார்.

டேஞ்சர்கள்

டேஞ்சர்கள்

2002ல் ஏற்பட்டதுபோலவே, மிகப்பெரிய அளவில் உலக நாடுகளில் பண வீக்கம் ஏற்பட்டு, பஞ்சமும் வாட்ட போகிறது, அமெரிக்க டாலரின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடையும், இயற்கை சீற்றத்திற்கு பிரான்ஸ் நாடு ஆளாகப்போகிறது.. புயல், வெள்ளம் ஏற்பட்டு, மிகப்பெரிய அழிவு ஏற்படும்.. அடுத்த 60 நாட்களுக்குள் பெரிய ஆபத்துகள் நமக்கு வரப்போகிறது.. இந்த அணு ஆயுத போர் வேறுபாட்டால், புவி வெப்பமயமாதல் நிகழும்.. மில்லியன்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவார்கள்... இறுதியில், கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும்... இந்த 3-ம் உலகப்போர் சுமார் 7 மாதங்கள் நீடிக்கும்... இதில் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும்.

 புதுஸ்ஸா தேசம்

புதுஸ்ஸா தேசம்

பூமியின் வரைபடத்தில் இருக்கும் பல நாடுகள் காணாமல் போய்விடும்.. இந்த 2022ம் ஆண்டு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும்.. பல நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்... இதிலும் பலர் இறந்துவிடுவார்கள்.. அந்த நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கை சீற்றம் காரணமாக, உலகமே 3 நாட்களுக்கு இருளில் மூழ்கிவிடும்.. அப்போது, அந்த போர்கள் திடீரென நின்றுவிடும்... 3 நாட்களுக்கு பிறகு, புதிய உலகம் பிறக்கும்.. அந்த உலகம், கற்காலத்தில் இருந்து வாழ்க்கையை மறுபடியும் தொடங்கும்..

 டிசம்பர் மாதம்

டிசம்பர் மாதம்

அதாவது எல்லா நவீனத்துவமும் மறைந்துபோய், மீண்டும் கற்காலத்தில் இருந்து புதிய வாழ்வை மனிதகுலம் ஆரம்பிக்கும் என்று கணித்துள்ளார்.. ஏற்கனவே டிசம்பர் மாதம் வந்தாலே நமக்கெல்லாம் பீதி கிளம்பிவிடும்.. இந்த நாஸ்ட்ர்டாம்ஸ் இப்படியெல்லாம் எழுதிவைத்து போயுள்ளாரே.. என்னாக போகுதோ என்ற கலக்கம் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமல்ல 2022 முடியும் சூழலில், இப்படி 3 வகையான கணிப்புளை கேள்விப்பட்டு, உலக மக்கள் அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்துள்ளனர்..!!

English summary
3 Major Predicts and World war 3 nuclear weapon detonation more, Baba vanga, nostradamuss predictions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X