2.7 கோடி சம்பளம்.. கூகுள் வேலையைத் துறந்த இந்தியப் பெண்.. துபாயில் மகன் கணவனுடன் செட்டிலானது ஏன்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில், கூகுள் போன்ற ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பது என்பது பலரின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. ஆனால், அந்தப் பெருமைமிக்க வேலையைத் துறந்து, தனது கணவர் மற்றும் மகனுடன் துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளார் தனு பூரி என்ற இந்திய ஐடி பெண் ஊழியர். அவர் தனது இந்த அதிரடி முடிவிற்குப் பின்னால் உள்ள 'வலிகளை' சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதுபற்றி விரிவாக பார்ப்போம். இந்தியர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் பற்றியும் பார்ப்போம்.

இந்திய ஐடி பெண் ஊழியர் தனு பூரி இதுபற்றி கூறும் போது, அமெரிக்க வாழ்க்கை ஒரு "தங்கக் கூண்டு . கைநிறைய சம்பளம் கிடைத்தாலும், விசா நடைமுறைகள், குடியேற்ற காலக்கெடு மற்றும் ஆவணங்கள் சார்ந்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை மனதிற்குள் ஒருவித அழுத்தத்தையும், நிலையற்ற உணர்வையும் ஏற்படுத்தியது.

A Salary of 2 7 Crores Indian Woman Quits Google Job and Moves to Dubai with son and husband

அதிக சம்பளம் இருந்தாலும், கடுமையான வேலைப்பளு மற்றும் திட்டப் பணிகள் காரணமாக, நீண்ட காலம் விடுமுறை எடுத்து குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது அங்கு மிகக் கடினமான ஒன்றாக எனக்கு இருந்தது.

எனது இந்த முடிவிற்கு மிக முக்கியமான காரணம் பெற்றோரிடமிருந்து பல ஆண்டுகள் பிரிந்திருந்ததுதான். அமெரிக்காவில் வாழ்ந்தபோது என்னை உண்மையிலேயே வருத்தமடையச் செய்தது என் பெற்றோரிடமிருந்து நான் தள்ளி இருந்ததுதான். பல ஆண்டுகள் நாங்கள் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ளவே இல்லை. நான் எவ்வளவு லட்சியம் கொண்டவளாக இருந்தாலும், அந்த இடைவெளி எனக்குள் ஏதோ ஒன்றை உடைத்துவிட்டது.

துபாய் நகரம் சிறந்த வேலைவாய்ப்புகளையும், வரி இல்லாத சம்பளத்தையும் வழங்குகிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதுதான் எனக்கு பிடித்தமான விஷயம். இப்போது நான் துபாயில் இருக்கிறேன். ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடைப்பட்ட நிச்சயமற்ற காலத்தில் கூட, அடுத்த விமானத்தைப் பிடித்து இந்தியா சென்று என் பெற்றோருடன் ஒரு காபி குடிக்க என்னால் முடிகிறது" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தியப் பணியாளர்கள் சந்திக்கும் நிதர்சனமான சிக்கல்களை தான் இந்திய ஐடி பெண் ஊழியர் தனு பூரி பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பதிவு, அமெரிக்காவில் வாழும் பல லட்சம் இந்தியர்களின் மனக்குமுறலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள் சந்திக்கும் பொதுவான சிக்கல்கள் இவைதான்.

இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கிடைப்பதில் 10 ஆண்டு கால தாமதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தங்களுக்குப் பிறகு தங்கள் குழந்தைகளின் நிலை என்னவாகும் என்கிற பயம் பல பெற்றோரை வாட்டுகிறது. H-1B விசாவில் இருப்பவர்கள் வேலையை இழந்தால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலையைத் தேட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இந்த '60 நாள் கெடு' ஒரு கத்தியைப் போல அவர்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டே இருக்கும்.

அமெரிக்க கார்ப்பரேட் கலாச்சாரத்தில் 'Leave Paradox' ஒரு பெரிய சிக்கல். சம்பளம் அதிகமாக இருந்தாலும், நீண்ட காலம் விடுமுறை எடுத்து இந்தியா வர அனுமதி கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இதனால் குடும்ப விசேஷங்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்குக் கூட அவர்களால் வர முடிவதில்லை.

பணம் மற்றும் சொகுசு வாழ்க்கை இருந்தாலும், பெற்றோரை முதியோர் இல்லங்களில் விட நேரிடுவது அல்லது அவர்கள் உடல்நலமில்லாமல் இருக்கும்போது அருகில் இருக்க முடியாமல் போவது இந்தியர்களுக்கு மிகப்பெரிய உணர்ச்சிப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்திய பெண் ஐடி ஊழியர் தனு பூரியின் முடிவு, இன்றைய தலைமுறைப் பணியாளர்கள் 'பணத்தை' விட 'வாழ்க்கைத் தரத்திற்கும்' , 'குடும்ப உறவுகளுக்குமே' முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. துபாய் போன்ற நாடுகள் வரி இல்லா சம்பளம் மற்றும் இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் வசதியை வழங்குவதால், பல இந்தியத் திறமையாளர்கள் இப்போது அமெரிக்காவை விட மத்திய கிழக்கு நாடுகளை நோக்கித் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

"வெற்றி என்பது வங்கிக் கணக்கில் இருக்கும் இலக்கங்களில் இல்லை, அது நம் அன்புக்குரியவர்களுடன் செலவிடும் நேரத்தில்தான் இருக்கிறது" - தனு பூரியின் இந்த வரிகள் ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்த இந்தியர்களின் குரலாக எதிரொலித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+