போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை! காசா மீது மீண்டும் தீவிர தாக்குதல்? அச்சத்தில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்திருக்கிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உலக நாடுகள் எவ்வளவோ முயன்றாலும் தற்போது வரை இங்கு நிரந்தர அமைதி சாத்தியமாகவில்லை. குறிப்பாக ஐநா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் சொன்ன 'சுதந்திர பாலஸ்தீனம்' எனும் அறிவுரையை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் இருக்கின்றன. இதுதான் தற்போதைய மோதலுக்கும் காரணமாக இருக்கிறது.

A UN Security Council resolution calling for an immediate ceasefire in Gaza has failed

தொடர் மோதல் போக்கின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், திடீர் ராக்கெட் தாக்குதலை தொடுத்தது. மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சிலரை பணைய கைதிகளாக பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக ஏறத்தாழ 50 நாட்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் 6,150 குழந்தைகள் உட்பட 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 38 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சமாதானம் பேச்சுவார்த்தையை உலக நாடுகள் தீவிரப்படுத்தின. கத்தார் இந்த பேச்சுவார்த்தையை தலைமையேற்று நடத்தியது. ஐநா சபையில் சீனாவும், ரஷ்யாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலை எழுப்பின. பின்னர் ஒரு வழியாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானது. இஸ்ரேலும், ஹமாஸ் படையும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை/சிறை கைதிகளை விடுக்க ஒப்புக்கொண்டன.

அதன்படி இஸ்ரேலும், ஹமாஸும் தங்கள் வசம் இருந்த கைதிகளை விடுவித்தனர். இதனால் சில நாட்கள் மட்டுமே போர் நிறுத்தம் நீடித்தது. இந்த போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்று அரபு நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இந்நிலையில் தற்போது கூடியுள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் காசா மீதான நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து தீர்மானத்தை முன்மொழிந்தது.

இந்த தீர்மானத்திற்கு 14 நாடுகள் ஆதரவளித்தன. பிரிட்டன் வாக்களிக்காமல் விலகிக்கொண்டது. இந்நிலையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை ரத்து செய்தது. எனவே தீர்மானம் தோல்வியடைந்தது. இது குறித்து ஐநாவின் அமெரிக்க துணை பிரதிநிதி ராபர்ட் வுட் கூறுகையில், "ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மட்டுமல்லாது ஹமாஸ் மீண்டும் தாக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+