"ஓகே சொன்ன ஹஸ்பண்ட்".. ஒரே வீட்டில் கணவன்.. காதலனுடன் ஒன்றாக வாழும் பெண்.. இனிமே இப்படித்தானாம்!
நியூயார்க்: ஒரே வீட்டில் கணவன் மற்றும் காதலனுடன் ஒன்றாக வாழும் பெண் ஒருவரை பற்றிய செய்தி இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
மனித உறவு முறைகளில் பல விதமான வகைகள் உள்ளன. மோனோகாமி என்றால் ஒருவருக்கு ஒருத்தி என்று வாழ்வது. பாலிகாமி என்றால் பல உறவுகளை கொண்டு இருப்பது என்று உறவு முறைகளிலேயே பல வகைகள் உள்ளன.
சமீப காலமாக உலகம் முழுக்க பாலிகாமி உறவு முறைகள் அதிகரித்து வருகின்றன. அதாவது ஓபன் ரிலேஷன்ஷிப் எனப்படும் ஒரே நேரத்தில் பல உறவுகளை கொண்டு இருக்கும் நிலை அதிகரித்து வருகின்றன.

உறவு முறை
ஒரு உறவு இன்னொரு உறவை பாதிக்காத வகையில், ஒரு உறவால் இன்னொரு உறவிற்கு சிக்கல் ஏற்படாத வகையில் இருப்பது பாலிகாமி உறவு முறையில் மிக முக்கியமானது ஆகும். இந்த நிலையில்தான் ஒரே வீட்டில் கணவன் மற்றும் காதலனுடன் ஒன்றாக வாழும் பெண் ஒருவரை பற்றிய செய்தி இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இண்டியானா பகுதியை சேர்ந்தவர் சாரா நிக்கோல். இவர்தான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறார்.

39 வயது பெண்
39 வயதை சேர்ந்த அந்த பெண் ரயான் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 8 வருடமாக சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் கடந்த 2020ம் ஆண்டு அந்த பெண் தன்னை ஒரு பாலிகாமி உறவு கொண்டவர் என்று தனது கணவரிடம் தெரிவித்து உள்ளார். இதை கேட்ட கணவர் ரயான் அதிர்ச்சி அடையாமல் மனைவியின் பாலிகாமி உறவை புரிந்து கொண்டு அதை ஆதரித்து உள்ளார்.

ரயான்
இந்த விஷயத்திற்கு முன்பே ரயான் மற்றும் சாரா இரண்டு பேருமே மற்ற பெண், ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளனர். இரண்டு பேருமே தங்களின் டேட்டிங் கதைகளை தங்களின் இணையர்களிடமும் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில்தான் மனைவி தன்னை பாலிகாமி என்று சொன்னதை அவரின் கணவர் ரயான் ஏற்றுக்கொண்டு உள்ளார். இந்த நிலையில்தான் ரோனி என்ற இளைஞரை சாரா தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

ரோனி
இந்த நிலையில்தான் ரோனியும் பல முறை உறவு கொண்டவர் என்பதை சாரா கண்டுபிடித்து உள்ளார். இதையடுத்து ரோனியை நம்முடைய வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்ளலாமே என்று ரயான் தெரிவித்து உள்ளார். அதாவது.. நீ ரோனியை காதலிப்பது தெரியும். அவன் ஓபன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நாமும் இருக்கிறோம். நாம் மூவரும் ஏன் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்க கூடாது என்று சாராவின் கணவர் ரயான் தெரிவித்து உள்ளார்.

சந்தோசமான உறவு
இதை சாராவும் ஏற்றுக்கொண்டு உள்ளார். இதை அடுத்தே மூன்று பேருமே ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். மூன்று பேரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டு, தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையும் பகிர்ந்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் உறவு முறைகளை பற்றி பேசிக்கொள்ளாமல்.. 3 பேருமே சந்தோசமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறோம்.. இனியும் இப்படியே வாழ்வோம் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications