நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மிருதன்".. அழிந்த உடனே மீண்டும் பிறந்த "ஸோம்பி" நட்சத்திரம்.. அதற்கு பின் நடந்த பெரிய ட்விஸ்ட்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: விண்வெளியில் உள்ள நட்சத்திரம் ஒன்று அழிந்து சில நிமிடங்களில் மீண்டும் பிறந்த சம்பவம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

உலகம் முழுக்க ஸோம்பி படங்கள் நிறைய வந்துள்ளன. தமிழில் கூட மிருதன் என்ற படம் வந்து ஹிட் அடித்தது.

ஒரு மனிதரை ஸோம்பி வைரஸ் தாக்கிய ஒருவர் கடித்து.. அந்த மனிதர் ஸோம்பி ஆவதை வைத்து பல படங்கள் இப்படி வந்துள்ளன.

பஞ்சாங்கம் மூலம் விண்வெளி பயணமா..! வாங்கிக்கட்டும் மாதவன் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையே சொல்றாரு பஞ்சாங்கம் மூலம் விண்வெளி பயணமா..! வாங்கிக்கட்டும் மாதவன் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையே சொல்றாரு

ஸோம்பி

ஸோம்பி

இறந்து போன பிணங்களுக்கு உயிர் வந்து மனிதர்களை கடிப்பதும் கூட ஒருவகையில் ஸோம்பி ஜானர்தான். ஆனால் இதெல்லாம் இப்போது வரை கற்பனைதான். நிஜத்தில் நடந்தது இல்லை. இந்த நிலையில்தான் விண்வெளியில் இருக்கும் நட்சத்திரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் "ஸோம்பி" நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள். காரணம் அந்த நட்சத்திரம் இறந்து போய் சில நிமிடங்களில் மீண்டும் ஸோம்பி போல உயிர் பெற்று உள்ளது. v

நட்சத்திரம்

நட்சத்திரம்

பொதுவாக ஒரு நட்சத்திரம் காலம் செல்ல செல்ல மங்கிக்கொண்டே வரும். அதற்கு வயது ஆக ஆக மங்கி அப்படியே அழிந்து போகும். கடைசியில் அழியும் முன் சில நட்சத்திரங்கள் அப்படியே வெடித்து சிதறி.. மொத்தமாக அணைந்து போகும். அதாவது அணைய போகும் மெழுகுவர்த்தி திடீரென சுடர் விடுவது போல பிரகாசமாக எரிந்து பின்னர் அணைந்து போகும். இதை சூப்பர் நோவா என்று அழைப்பார்கள்.

 சூப்பர் நோவா

சூப்பர் நோவா

இந்த நிலையில்தான் NGC 1309 என்ற கேலக்சியில் நட்சத்திரம் ஒன்று இதேபோல் வெடித்துள்ளது. இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 108 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அதாவது அந்த நட்சத்திரத்தை நோக்கி நீங்கள் உங்கள் வீட்டு மாடியில் இருந்து டார்ச் அடித்தால் அந்த ஒளி நட்சத்திரத்தை சென்று சேர 108 ஒளி மில்லியன் ஆண்டுகள் ஆகும். ஒளி ஒரு வருடத்தில் செல்லும் தொலைவை ஒளி ஆண்டு என்று அழைப்பார்கள்.

அழிந்தது

அழிந்தது

சரி விடுங்கள்.. 108 மில்லியன் ஆண்டுகள் தொலைவில் உள்ள அந்த நட்சத்திரத்தை Hubble space தொலைநோக்கி உதவியுடன் கலிபோர்னியாவில் உள்ள Las Cumbres Observatory ஆய்வகத்தில் இருந்து ஆய்வு செய்துள்ளனர். அந்த நட்சத்திரம் இந்த வாரம் வெடிக்கும் என்று கணித்துள்ளனர். அது வெள்ளை நிறத்தில் இருக்கும் பெரிய நட்சத்திரம் ஆகும். அது இன்னொரு நட்சத்திரத்தை சுற்றி வந்துள்ளது.

மீண்டும் பிறந்தது

மீண்டும் பிறந்தது

அந்த நட்சத்திரமும் இதை சுற்றி வந்துள்ளது. இந்த நிலையில் supernova விளைவு காரணமாக வெடித்த அந்த வெள்ளை நட்சத்திரம் அணைந்து போகாமல் தொடர்ந்து சுடர்விட்டு எரிந்துள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நட்சத்திரம் வெடித்த.. சில நிமிடங்களில் இன்னும் பிரகாசமாக எரிய தொடங்கி உள்ளது. முன்பு இருந்ததை விட அந்த நட்சத்திரம் பொலிவாக காணப்பட்டுள்ளது.

வியப்பு

வியப்பு

விண்வெளியில் உள்ள அந்த நட்சத்திரம் அழிந்து சில நிமிடங்களில் மீண்டும் பிறந்த இந்த சம்பவம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எப்படி அந்த நட்சத்திரம் வெடித்து சிதறாமல் மீண்டும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதுவரை இப்படி நடந்தது இல்லையே என்று விஞ்ஞானிகள் குழம்பி போய் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இதை ஸோம்பி நட்சத்திரம் என்று ஆராய்ச்சியாளர்கள் அழைத்து வருகிறார்கள்.

English summary
A zombie star went through super nova stage and came back to life miraculously .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X