யார் இந்த ஆகாஷ் போப்பா? அரசு துறைகளை ஒழிக்க எலான் மஸ்க்குடன் கைகோர்த்த இந்திய வம்சாவளி!
நியூயார்க்: அரசு துறைகளை ஒழிப்பதன் மூலம் செலவீனங்களை கட்டுப்படுத்த டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், இதற்கான பணியில் இந்திய வம்சாவளி இளைஞர் ஆகாஷ் போப்பாவும் இணைந்திருக்கிறார்.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து விமர்சனங்களை உருவாக்கும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் அரசு துறைகளை ஒழிப்பது. ஆனால் காமெடி என்னவெனில், அரசு துறையை ஒழிக்க புதியதாக ஒரு துறை உருவாக்கப்பட்டு அதற்கு பில்லியன் டாலர் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.

'திறமை துறை' Department of Government Efficiency (DOGE) என பெரியிடப்பட்ட இதற்கு எலான் மஸ்க் தான் தலைவர். இவர் தலைமையில் 6 இளைஞர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் வேலை, திறமையில்லாதவர்களை கண்டறிந்து அவர்களை வேலையை விட்டு அனுப்புவதுதான். அமெரிக்காவில் 400 துறைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு
1.FBI
2.NASA
3.EPA (Environmental Protection Agency)
4.CIA
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த DOGE டீம் செய்த முதல் வேலை, 400 துறைகளில் ஒன்றான USAID எனும் துறைக்கான நிதியை வெட்டியதுதான். இந்த துறையை முழுமையாக நீக்க வேண்டும் எனில் அதில் கொஞ்சம் சட்ட சிக்கல் இருக்கிறது. ஆனால் நிதி வெட்டு மூலம் இதை செயல்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்(BSNL மாதிரி). அதேபோல 400 துறைகளில் மொத்தமுள்ள பணியாட்களின் எண்ணிக்கையை 100%லிருந்து 75% ஆக குறைக்க வேண்டும். இதெல்லாம் DOGE டீமின் வேலை.
இந்த டீமில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆகாஷ் போப்பா இணைந்திருக்கிறார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேலாண்மை, தொழில்முனைவு மற்றும் தோழில்நுட்ப துறையில் பட்டம் பெற்ற இவர், பேஸ்புக்கின் மெட்டா உள்ளிட்ட பெரிய பெரிய நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI), தரவு பகுப்பாய்வு (data analytics) மற்றும் நிதி மாடலிங் நுட்பங்கள் (financial modelling techniques) உள்ளிட்ட துறையில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டிருக்கிறார்.
போப்பாவுடன், எட்வர்ட் கோரிஸ்டைன், லூக் ஃபாரிட்டர், கௌடியர் கோல் கில்லியன், கேவின் கிளிகர் மற்றும் ஈதன் ஷாட்ரன் என 5 இளைஞர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் 19-22 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்கிறது. அவர்களை வேலையை விட்டு நீக்கினால் அதை எதிர்த்து வழக்கு போட முடியும். மட்டுமல்லாது, உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கு சாதகமாக அவர்களின் சம்பளமும் அதிகரிக்கும். இதெல்லாம் சரியாக இருக்கும்போது உற்பத்தியும் சிறப்பானதாக இருக்கும்.
ஆனால் தனியார்துறை பெயரளவுக்கு மட்டுமே சிறப்பானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட அரசு துறைகளை ஒழித்துக்கட்ட உருவாக்கப்பட்ட DOGE டீமில் இந்திய இளைஞர் ஒருவர் இணைந்திருப்பது வெகுவாக வரவேற்கத்தக்கது அல்ல என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications