போனில் சத்தமா பேசுறது ஒரு குத்தமா.. ரகளை செய்த பெண்.. ரூ.28,000 அபராதம் விதித்த அமெரிக்க போலீசார்!

அமெரிக்காவில் சாலையில் சென்ற பெண், அதிக சத்தமாக செல்போனில் பேசியதால் போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சாலையில் நடந்து சென்ற போது தனது செல்போனில் அதிக சத்தத்துடன் பேசியதால் பெண் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்த வினோத சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்தவர் டைமண்ட் ராபின்சன். இரு தினங்களுக்கு முன்பு இவர் செல்போனில் பேசியபடியோ சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவர் மிக சத்தமாக போனில் பேசியதாகத் தெரிகிறது.

இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு பெண்மணி, ராபின்சனிடம் 'சத்தமாக போனில் பேசாதே..' எனக் கூறியதோடு, 'போனை கட் செய்' எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் கோபமான ராபின்சன், அந்த பெண்ணிடம் 'உனது வேலையை பார்த்துக் கொண்டு செல்' எனக் கூறிவிட்டு தொடர்ந்து செல்போனில் பேசியபடி நடந்து சென்றிருக்கிறார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இதையடுத்து அந்த பெண் போலீசாரை போனில் அழைத்து, ராபின்சன் சத்தமாக போனில் பேசியபடி செல்வதாக அவர் மீது புகார் கூறியிருக்கிறார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராபின்சனை அழைத்து பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

நேரலை

நேரலை

இதனால் மேலும் கடுப்பான ராபின்சன் தனது கட்டுபாட்டை இழந்து போலீசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அதோடு நடந்த சம்பவங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் நேரலை செய்த அவர், தான் ஒரு குற்றமும் செய்யாத போதும் போலீசார் தன்னை இழிவாக நடத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம்

ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம்

தான் ஒரு கருப்பின பெண் என்பதாலேயே போலீசார் தன்னிடம் இப்படி நடந்துகொள்வதாக ராபின்சன் கூறியதால், சமூகவலைதளங்களில் இந்த சம்பவம் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கடந்த காலங்களில் போலீசாருடன் ஏற்பட்ட தகராறில் ஜார்ஜ் பிளாய்ட் மற்றும் டான்ட் ரைட் போன்றோர் கொல்லப்பட்டதால், அமெரிக்காவில் பெரும் கலவரங்கள் தோன்றியது மறக்க இயலாதது. போலீசார் இனவெறியுடன் நடந்து கொள்வதாக அங்கு பெரும் குற்றச்சாட்டும் உள்ளது.

அபராதம்

அபராதம்

இதனால் இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்க விரும்பாத போலீசார், ராபின்சன் மீது பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைத்தல் எனும் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ரூ.27,800 அபராதம் விதித்தனர். கடைசியில் வேறு வழியில்லாமல் ராபின்சன் அந்த அபராதத் தொகையை கட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+