நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கட்டிப்பிடித்து" நெருக்கம்..கிச்சனில் கணவன் பின்னாடியே சென்ற மனைவி.. பகீர் சம்பவம்.. ஷாக் அமெரிக்கா

கணவனை கொலை செய்த மனைவிக்கு கோர்ட் தண்டனை தந்துள்ளது

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொலையும் செய்வாள் அமெரிக்க பத்தினி.. அப்படித்தான் ஒரு சம்பவம் அங்கு நடந்து மொத்த பேரையும் வெலவெலக்க வைத்து வருகிறது..!

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ப்ராபி.. இவரது கணவர் டேனியல்.. நான்சி ஒரு எழுத்தாளர்.. நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்.

முப்படைகளில் 4 ஆண்டுகள் பணி.. அக்னிபாத் திட்டத்தின் சிறப்பசங்கள் தெரியுமா? முப்படைகளில் 4 ஆண்டுகள் பணி.. அக்னிபாத் திட்டத்தின் சிறப்பசங்கள் தெரியுமா?

டேனியல், ஒரு சமையல் கலைஞர்.. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம், காலேஜ் ஒன்றில் டேனியல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்..

கிச்சன்

கிச்சன்

அந்த காலேஜின் கிச்சனில் இவரது சடலம் கிடந்தது.. யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.. ஆனால், யார் சுட்டுக் கொன்றது என்று தெரியவில்லை.. அதனால், போலீசார் விசாரணையை துவக்கினர்.. கடைசியில் மனைவி நான்சிதான் டேனியலை கொன்றது தெரியவந்தது.. இதற்கு காரணம், டேனியலுக்கு வரவேண்டிய 1.5 மில்லியன் டாலர் இன்ஸ்யூரன்ஸ் பணத்திற்காக அவரை கொலை செய்துவிட்டது தெரிய வந்தது.

ஹஸ்பண்ட்

ஹஸ்பண்ட்

எனவே, அதற்கான ஆதாரங்களை திரட்ட போலீசார் முயன்றனர்.. நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.. அந்த புத்தகத்தின் பெயர், "ஹவ் டு மர்டர் யுவர் ஹஸ்பண்ட்" (உங்கள் கணவனை கொலை செய்வது எப்படி?).. இதுதான் அந்த புத்தகம்,.. இந்த புத்தகத்தை பார்த்ததும் போலீஸ்காரர்கள் அதிர்ந்து போயினர்.. பிறகு படித்து பார்த்தனர்.. அதில், துப்பாக்கி, குண்டுகள், கூர்மையான பொருட்கள், விஷம், போன்றவைகள் குறித்து தனித்தனியாக குறிப்பிட்டு, இவைகளை வைத்து எப்படி கொலை செய்வது என்றுதான் நான்சி அதில் விலாவரியாக எழுதியிருந்தார்..

 துப்பாக்கி

துப்பாக்கி

அதுமட்டுமல்ல, கொலை செய்வதைவிட இறப்பதுதான் எளிது.. கொலை செய்வது ரொம்ப கடினமானது.. அதனால், கொலையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும், ஜெயிலில் இருக்க எனக்கு பிடிக்காது' என்று அதில் தெரிவித்திருந்தார். அதாவது, கணவனை கொலை செய்வதற்கு முன்பே, நான்சி இவ்வாறு எழுதி வைத்திருக்கிறார்.. எனினும், இந்த புத்தகத்தை போலீசார் கோர்ட்டில் ஆதாரமாக கொண்டு போய் தந்தனர்..

நான்சி

நான்சி

ஆனால், கொலைக்கு முன்னால் எழுதிய புத்தகம் இது.. ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டனர்.. இதனால் அதிர்ந்து போன வழக்கறிஞர்கள், வேறு ஆதாரங்களும் தங்களிடம் இல்லாததால், நான்சிதான் கொலையாளி என்று திரும்ப திரும்ப சொன்னார்கள்.. நான்சிக்கு பண தேவை இருந்திருக்கிறது.. கணவனை கொன்றுவிட்டால், 1.5 மில்லியன் டாலர்கள் இன்ஸ்யூரன்ஸ் கிடைக்கும் என்பதால்தான் இப்படி கொலை செய்துள்ளார் என்று நீதிபதியிடம் விளக்கினார்கள்.

 ஆன்லைன் ஆர்டர்

ஆன்லைன் ஆர்டர்

அதுமட்டுமல்லாமல், காலேஜில் வைத்துதான், டேனியலை நான்சி கொன்றுள்ளார்.. கொலை நடப்பதற்கு முன்பாக, வீட்டில் இருந்து காலேஜுக்கு நான்சி காரில் சென்றதற்கான சிசிடிவி ஆதாரமும் உள்ளது என்றுகூறி அந்த ஆதாரத்தையும் நீதிபதியிடம், வக்கீல்கள் தாக்கல் செய்தனர்.. கணவனை சுட்டுக் கொன்ற துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார் என்றும் தெரிவித்தனர்... அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும், இரண்டேகால் கோடி ரூபாய் வீடும் நான்சி வசம் சென்றதாகவும் கூறினர்.

குற்றவாளி

குற்றவாளி

இவ்வளவு ஆதாரங்களை கேட்ட, 12 பேர் கொண்ட நடுவர் மன்றம், நான்சிதான் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்தது.. இறுதியாக, கணவனை கொன்ற நான்சிக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது... ஆனால், நான்சி விடுவாரா என்ன? அப்பீலுக்கு போவதாக சொல்லி இருக்கிறார்.. நான்சிதான் கணவரை கொன்றார் என்ற தீர்ப்பு வெளியானதும், ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும், நண்பர்களும் அதிர்ந்து போனார்கள்.. காரணம், கணவன் மனைவி எப்போதுமே அந்நியோன்யமாகவே இருந்தார்களாம்.

 அப்பீலுக்கு போகும் நான்சி

அப்பீலுக்கு போகும் நான்சி

அதிலும் டேனியலின் நண்பர்கள், நான்சியிடம் வந்து, "நீங்களா உங்கள் கணவரை கொன்றது? அவர் உங்களுக்கு தீவிரமான ரசிகர் ஆயிற்றே? நீங்கள் வசதியாக வாழ்வதற்காக, பொய் சொல்லி உங்களின் மிகப்பெரிய ரசிகராக இருந்தவரை கொன்றுவிட்டீர்களே" என்று திட்டி தீர்த்தனர்.. கணவனை கொல்வது எப்படி என்ற புத்தகத்தை எழுதியதுடன், அதை செயல்படுத்தி கொலையும் செய்துவிட்டார் மனைவி.. இப்போது அந்த தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயன்று கொண்டிருக்கிறார்.. என்னாகுமோ?!

English summary
american writer nancy who wrote how to murder your husband was sentenced life time jail கணவனை கொலை செய்த மனைவிக்கு கோர்ட் தண்டனை தந்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X