வெறும் 22 நிமிஷம்.. இதை யோசிக்கவே முடியல.. மூக்கில் போன நைட்ரஜன்.. திணறி அடங்கிய மூச்சு.. "ஐ லவ் யூ"
நியூயார்க்: குற்ற விசாரணையின் முதல்நோக்கமே, குற்றவாளிகளை தண்டிப்பதைவிடவும், மீண்டும் அந்த குற்றம் நடைபெறாமல் செய்யவேண்டும் என்பதுதான்.
ஆனால், இதுவரை எத்தனையோ பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த குற்றங்கள் குறைந்துவிட்டனவா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இப்போது நடந்துள்ள இந்த அமெரிக்க சம்பவமும் அப்படித்தான் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.

என்ன நடந்தது: அமெரிக்காவை சேர்ந்தவர் சார்லஸ் சென்னட்... இவருடைய மனைவி பெயர் எலிசபெத் சென்னட்.. சார்லஸ் தன்னுடைய மனைவி பெயரில் அதிக தொகை அளவில் காப்பீடு ஒன்றை எடுத்திருந்தார். எனவே, மனைவியை கொலை செய்யவும் திட்டமிட்டார்.
இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு பணம் தந்து ஏற்பாடு செய்தார்.. ஸ்மித்தும், தன்னுடைய நண்பர் பார்க்கர் உதவியுடன் எலிசபெத்தை கொன்றுவிட்டார். ஆனால், சார்லஸ் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
மரண தண்டனை: இந்த வழக்கில், கடந்த 2010-ல் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதேபோல, ஸ்மித்துக்கு கடந்த 2022-ல் மரண தண்டனை முடிவானது. ஆனால், இந்த மரண தண்டனையை ஊசி வழியே தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்தார்கள்.. ஆனால், விஷ ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கலால் அது நிறைவேற்றப்படவில்லை.
எனவே, கடந்த மே மாதத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஸ்மித்துக்கு நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை அமெரிக்க சுப்ரீம்கோர்ட் பிறப்பித்தது. அதன்படி அமெரிக்காவில், முதன்முறையாக இந்த முறைப்படி மரண தண்டனையானது நிறைவேற்றத்துக்கு தயாரானது.
நைட்ரஜன்: தூய்மையான நைட்ரஜன் வாயு மூக்கில் செலுத்த தயாரானது.. அரை மணி நேரம் இதற்காக டைம் விதிக்கப்பட்டது.. ரூம் ஒன்றில் குற்றவாளி கட்டிவைக்கப்பட்டார்... அலபாமா ஜெயிலிலேயே இதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ரூமில், படுக்கையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், 58 வயதான ஸ்மித் படுக்க வைக்கப்பட்டார்.
அவரது முகம் முழுக்க மாஸ்க் போடப்பட்டது. ஆனால், மூக்கில் மட்டும் சுவாசக்குழாய் இணைக்கப்பட்டது... மூச்சு காற்றுக்கு பதிலாக, தூய்மையான நைட்ரஜன் அந்த சுவாசக்குழாயில் செலுத்தப்பட்டது. அப்போது அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மரண தண்டனையின்போது அருகே அனுமதிக்கப்பட்டனர்.. உயிரிழக்கும் முன்பு, கடைசியாக தன்னுடைய மனைவியை பார்த்து "ஐ லவ் யூ" என்றார் ஸ்மித்.. மொத்தமாக 22 நிமிடங்களில், ஸ்மித்தின் மூச்சு அடங்கியது..
கண்டனங்கள்: இந்த தண்டனைக்குதான் பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் கிளம்பி உள்ளன.. இதுபோல தேவையில்லாத முயற்சியை அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
ஆனால், அலபாமா மாகாணம் இந்த மரண தண்டனை முறையை நியாயப்படுத்துகிறது. இதற்கு காரணம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மரண தண்டனை முறைகளில் இதுதான் மிகவும் மனிதாபிமான முறையில் இருப்பதாக கூறுகிறது.. ஆனால், இது மனிதாபிமான முறையிலான மரணம் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது என்று கொதிக்கிறார்கள் தன்னார்வர்கள்.
நடைமுறை: அமெரிக்காவில் மரண தண்டனை நடைமுறை இருக்கிறது என்றாலும், உடலில் ஊசி செலுத்தியே தண்டனையை நிறைவேற்றுவார்கள். கடந்த 1999லேயே இதுபோல வாயுவைப் பயன்படுத்தி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஹைட்ரஜன் சயனைடு வாயுவை அப்போது பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த தண்டனை முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் அதே யுக்தியை நீதிமன்றம் கையிலெடுத்துள்ளதுள்ளது, நைட்ரஜன் வாயுவால் தண்டனை தருவது இதுதான் முதல்முறையாகும்.
மனித உரிமைகள்: இந்த தண்டனை முறைக்கு கடும் கண்டனத்தை ஐநா பதிவிட்டுள்ளது.. ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கியது குறித்து, ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், "நைட்ரஜன் வாயு மூச்சுத்திணறல் மூலம் அமெரிக்காவில் கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சித்திரவதைக்கு சமம்" என்று தெரிவித்துள்ளார். இந்த முறைக்கு அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த முறை மனிதாபிமானம் நிறைந்தது என்று என்னதான் அமெரிக்க அரசு சொன்னாலும்கூட, இது ஒரு கொடூரமான பரிசோதனை முயற்சி என்ற விமர்சனம்தான் அதிகமாக வருகிறது.
அமெரிக்கா: ஒருமுறை அமெரிக்காவில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது, 40 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு எதிராக இருப்பதாக கருத்து சொன்னார்களாம்.. இதுவே கடந்த 40 ஆண்டுகளில் மரண தண்டனைக்கு எதிராகக் கிடைத்த ஆதரவின் உச்சம் என்று கருதப்பட்டது. ஆனால், 1990-களின் மத்தியில் இது 20 சதவீதமாக குறைந்துவிட்டது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஆக, ஒரு காட்டு மிராண்டித்தனத்துக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்குவதை எந்த ஒரு அரசும் செய்யக்கூடாது, அதை எந்த ஒரு நாகரிக சமூகமும் அனுமதிக்கக்கூடாது என்பது போன்ற கருத்துக்கள்தான், ஸ்மித்தின் மரண தண்டனையில் மேலோங்கி வருகின்றன..!!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications