ஈரானை கதறவிடும் அமெரிக்கா.. மீண்டும் பொருளாதார தடை.. அடிமடியிலேயே கைவைத்த டிரம்ப்.. அதிரடி
நியூயார்க்: அணுஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள நிலையில் இன்னும் ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் நடைபெறவில்லை. இதனால் கோபமான டொனால்ட் டிரம்ப், ஈரானின் அடிமடியிலேயே கைவைத்துள்ளார். அதன்படி நேற்று ஈரான் மீது முக்கிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து அதிரடி காட்டி உள்ளது. இதனால் ஈரானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயன்று வருகிறது. ஆனால் அமெரிக்கா அதனை விரும்பவில்லை. இதனால் அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஈரான் வாக்குறுதி அளிக்க வேண்டும். அதோடு அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்பது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார்.

இதுதொடர்பாக ஈரான் உயர்மட்ட தலைவர் சையதுல்லா அலி காமேனிக்கு கடிதம் எழுதினார். முதலில் இந்த கடிதத்தை ஈரான் நிராகரித்தது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்று ஈரான் தெரிவித்தது. ஆனால் டொனால்ட் டிரம்ப் விடவில்லை. ஈரான் மீது குண்டு வீசப்படும். ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தொடர்ந்து மிரட்டினார்.
இதனால் ஈரான், அமெரிக்காவுடன் மறைமுக பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி கடந்த 12ம் தேதி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் முதற்கட்டமாகவும், கடந்த 19 ம் தேதி இரண்டாம் கட்டமாக இத்தாலி தலைநகர் ரோமில் வைத்தும் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் பேசியுள்ளது பாசிட்டிவ் சைனாக பார்க்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக வரும் 26ம் தேதி 3வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதற்கிடையே தான் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛ஈரான் அணுஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்காமல் காலம் தாழ்த்தும் செயலில் ஈடுபடுகிறது. இதனால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கவும் தயங்கமாட்டேன்'' என்று அறிவித்தார். இப்படியான சூழலில் தான் தற்போது ஈரான் மீது அமெரிக்கா அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா.
ஈரானின் எல்பிஜி காஸ் விற்பனை துறையில் சையத் அசாதுல்லா எமாம்ஜோமோ மற்றும் அவரது கார்ப்பரேட் நெட்வொர்க் முன்னிலையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மீது தற்போது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனை அமெரிக்காவின் கருவூலத்துறை உறுதி செய்துள்ளது. இந்த நிறுவனம் என்பது வெளிநாடுகளுக்கு பல கோடி மதிப்பிலான எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பணம் என்பது ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் லெபனான் நாட்டில் இயங்கும் ஹெஸ்புல்லா, ஏமனில் செயல்படும் ஹவுதிகள், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆயுத சப்ளைக்கும் இதன் பணம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அந்த நிறுவனம் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா இப்படி பொருளாதார தடைகளை விதிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அமெரிக்காவை பல முறை ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த பொருளாதார தடைகள் இப்போதும் அமலில் உள்ள நிலையில் புதிய பொருளாதார தடைகள் என்பது விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. இப்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபரானதும் இந்த பிரச்சனை என்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக அணுஆயுதம் தயாரிக்க விடாமல் ஈரானை, அமெரிக்கா தடுக்கிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 2 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் அணுசக்தி திட்டம் தொடர்பான சாத்தியமான விவரங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் தயாரிக்க ஈரானும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது. இதனால் விரைவில் அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி திட்டம் சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக ஈரானின் முக்கிய நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கா மீது ஈரான் கோபமடைந்துள்ள நிலையில் வரும் நாட்களில் அமெரிக்கா உடனான அணுசக்தி திட்டம் சார்ந்த பேச்சுவார்த்தை எப்படி போகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications