ஓ மை காட்.. ட்ரம்ப்பின் "இன நிற வெறுப்பரசியல்".. ஆவேசம் அடங்காத மக்கள்.. தொடரும் கொலை மிரட்டல்கள்
ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்
நியூயார்க்: முன்னாள் அதிபர் ட்ரம்ப்புக்கு கொலை மிரட்டல் விடுத்த தாத்தாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, டிரம்ப்பின் பெயர் தினம் தினம் மக்களிடையே உச்சரிக்கப்பட்டு வருகிறது.. டிரம்ப் பற்றிய செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
செய்திகள் எதுவுமே தன்னை பற்றி வெளிவரவில்லையானால், தானாகவே எதையாவது கிளப்பி விட்டு வைரலாக்கிவிடுவார் ட்ரம்ப்.. இப்படித்தான் பலமுறை சர்ச்சையாக பேசி மாட்டிக் கொண்டுள்ளார்.

ட்ரம்ப்
இதுவரை தன்னை எதற்காக மக்கள் தேர்தலில் தோல்வியடைய வைத்தார்கள் என்பதை ஆராயவே இல்லை.. அதேசமயம் தன்னுடைய தோல்வியையும் அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை உணராமல், அடுத்தடுத்த அரசியலை அங்கு முன்னெடுத்து வருகிறார்.. இந்நிலையில், ட்ரம்ப் மீது வெறுப்படைந்த ஒருவர், அவரை கொல்வதற்காகவே முடிவெடுத்துவிட்டார்.

கொலை மிரட்டல்
அந்த தாத்தாவுக்கு 72 வயதாகிறது.. டிரம்ப்புக்கோ 75 வயதாகிறது... தாத்தா அமெரிக்காவின் ரகசிய துறைக்கு போனை போட்டு, டிரம்ப்பை கொல்ல போகிறேன் என்று சொல்லி உள்ளார்.. அதுவும் ட்ரம்பை கடத்தி கொண்டு போய் கொன்றுவிடுவேன் என்று போலீஸ் அதிகாரிகளிடம் தாத்தா சொல்லி உள்ளார்.. இதனால் அதிர்ந்து போன போலீசார், தாத்தாவின் போன் சிக்னலை வைத்து, நேரடியாக வீட்டுக்கு வந்து அவரை கைது செய்து கொண்டு போய்விட்டனர்.

விசாரணை
அதேபோல, தாமஸ் என்பவரும் ட்ரம்ப்பை கொல்ல போவதாக மிரட்டல் விடுத்தார்.. இவர் நியூயார்க்கின் ரகசிய போலீசாருக்கு கொலை மிரட்டடல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.. இந்த மெசேஜை போலீசார் கண்டுகொள்ளவில்லையானாலும், 2, 3 முறை தொடர்ந்து கொலை மிரட்டல் மெசேஜ் வரவும்தான் உஷாரானார்கள்.. அதனால் தாமஸையும் கைது செய்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது.. ஆனால், விசாரணையில் ஒரு இடத்தில்கூட ட்ரம்ப் என்ற வார்த்தையை தாமஸ் பயன்படுத்தவே இல்லையாம்.. ஹிட்லர், ஹிட்லர் என்றே தன்னுடைய பதிலில் சொல்லி உள்ளார்..

கோர்ட்
இறுதியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் போலீஸ்.. ஜாமீன் தொகையை கோர்ட்டில் கட்டியதையடுத்து தாமஸ் வெளியே வந்தார்... ஆனாலும் இரவு நேரத்தில் வெளியே செல்ல தாமசுக்கு அனுமதி இல்லை.. போலீசுக்கு தெரியாமல் அவர் வெளியே எங்கேயும் நடமாடவும் முடியாது.. அப்படியே நடமாடினாலும், தங்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, தாமஸ் உடம்பில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாம்.. இது ஒருபக்கம் இருந்தாலும், நாளுக்கு நாள் ட்ரம்ப் மீதான வெறுப்புணர்வு அங்கு அதிகமாகி கொண்டே வருகிறது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications