முடிஞ்சா தடுத்து பாரு! எலான் மஸ்க்குக்கு இந்திய வம்சாவளி டெக் சிஇஓ சவால்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தை (USAID) முற்றிலுமாக முடக்க எலான் மஸ்க் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் முடிந்தால் அதை செய்து காட்டுமாறு இந்திய வம்சாவளி டெக் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் சவால் விட்டிருக்கிறார்.

USAID-லிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும், இதை முடிந்தால் தடுத்து பாருங்கள் என்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இது டெக் உலகில் சலசலப்பாக வெடித்திருக்கிறது.

elon musk us

Chat GPT, Gemini, DeepSeek போன்ற AI நிறுவனங்களை போல Perplexity என்பதும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமாகும். அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இதன் சிஇஓவாக இருக்கிறார். இவர் போட்டிருக்கும் ஒற்றை ட்வீட்தான் டெக் உலகில் விவாதமாக மாறியிருக்கிறது. காரணம், USAID-ஐ முடக்குவதை இவர் எதிர்த்திருக்கிறார்.

அதாவது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றிக்கு USAID எனும் அமெரிக்க துறை உதவி செய்து வருகிறது. ஆண்டுக்கு சில குறிப்பிட்ட கோடிகளை அமெரிக்க அரசு இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. ஆனால், இந்த துறை தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றும், துறைக்கு என ஒதுக்கப்பட்ட நிதியை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி வேஸ்ட் ஆகிறது எனவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே இதனை முடக்கும் பணி எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர், USAID என்பது கிரிமினல் அமைப்பு என்று விமர்சித்திருக்கிறார்.

தற்போது இந்த துறைக்கான நிதி வெட்டப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த துறையின் கீழ் சுமார் 10000 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை வெறும் 300 ஆக குறைக்க மஸ்க் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த பின்னணியில் மஸ்க்கை கலாய்க்கும் வகையில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.

அதாவது இப்போது எலான் மஸ்க்கிடம் இருக்கும் 'டெஸ்லா' நிறுவனம் கடந்த 2010 காலத்தில் பொது நிறுவனமாக இருந்தது. ஏறத்தாழ 8 ஆண்டுகளாக இது அப்படித்தான் இருந்தது. அதன் பின்னர் 2018ல் இதனை தனியார் நிறுவனமாக மாற்ற தயார் என்று மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இன்றுவரை டெஸ்லா பொது நிறுவனமாகவே தொடர்கிறது. ஆக எலான் மஸ்க்கின் முயற்சியை கேலி செய்யும் விதமாக, 'USAID-லிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது' என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.

பொது நிறுவனம் என்றால் என்ன?:

பொது துறைக்கும், பொது நிறுவனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்திற்கு NASA என்பது அமெரிக்காவின் பொதுத்துறை நிறுவனமாகும். இதற்கு அந்நாட்டு அரசு செலவு செய்கிறது. அதேபோல இதன் பங்குகளை, பங்கு சந்தையில் விற்கமாட்டார்கள்.

ஆனால் பொது நிறுவனத்தின் பங்குகள், அமெரிக்க பங்கு சந்தையான NASDAQ-ல் (நம்மூர் BSE போல) விற்கப்படும். வாங்குபவர்கள் வாங்கிக்கொள்ளலாம். டெஸ்லா, ஆப்பிள், கூகுள் போன்றவை பொது நிறுவனங்கள்.

ஆனால் இதே எலான் மஸ்க்கின் SpaceX, தனியார் நிறுவனமாகும். இதன் பங்குகளை பொது வெளியில் யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+