சின்ன சின்ன கேஸ்களில் அதிரடி.. இனி AI உதவியோடு தீர்ப்புகளை வழங்க போகும் நீதிபதிகள்.. இதென்ன புதுஸ்ஸா
சென்னை: அனைத்துத் துறைகளிலும் இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றமானது, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கு கடந்த ஜூலை மாதம் தடைவிதித்து, கேரள மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஒரு சிறப்பு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருந்தது.. இந்நிலையில், இனி AI உதவியோடு தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கப்போவதாக தகவல் வெளியாகி, வியப்பை கூட்டி வருகிறது.
சமீப காலமாக, ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது... எங்குபார்த்தாலும் ஏஐ உபயோகப்படுத்துவதால், எந்தவொரு கடினமான காரியத்தையும் எளிதாக்கி கொள்ள முடிகிறது.. மருத்துவம், விஞ்ஞானம் முதல் அனைத்து துறைகளிலும் ஏஐ கலக்கி வருகிறது.

சமீபத்தில் வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க ஏஐ போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்று கேரளா கோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது..
செயற்கை நுண்ணறிவு கருவிகள்
அந்த உத்தரவில், "நீதிமன்ற உத்தரவுகளை வெளியிடும் போது செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தக்கூடாது.. ஏஐ கருவிகள் வழக்குகளின் தீர்ப்புகள் மற்றும் தீர்மானங்களை எடுக்க பயன்படுத்தப்படக்கூடாது, அது தனிபட்ட தகவல்கள் மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கக்கூடும்....
எனவே, நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் போன்றவை ஏஐ கருவிகள் மூலம் உருவாக்கப்படக்கூடாது. இது நீதிபதியின் நேரடி பொறுப்பாகும். சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உபயோகித்துத் தீர்மானம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவை தவறான தகவல்களை அளிக்கக்கூடும் என்பதோடு, தரவுப் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும்.
எனவே, ஒரு வழக்கில் தீர்ப்பு முடிவுகளை ஆராயவோ அல்லது தீர்ப்பு உத்தரவுகளை தயார் செய்யவோ, ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், வைகளில் பிழைகள் நிறைய ஏற்பட வாய்ப்புள்ளது.. அத்துடன் தகவல்களும் வெளியே கசிய வாய்ப்புள்ளது..
கேரளா ஹைகோர்ட்
எப்போதுமே ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டுமானால், அது மாநில நீதித்துறை அங்கீகரித்த கருவியாக இருக்க வேண்டும். மேலும் அந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி பெறப்பட்டிருக்க வேண்டும். ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட ஏஐ கருவியில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக நினைத்தால்,அதனை உயர் கோர்ட் தகவல் தொழில்நுட்ப பிரிவிடம் தெரிவிக்க வேண்டும்.
எப்போதுமே ஏஐ கருவிகள் வழங்கும் தீர்வுகள், சட்ட மேற்கோள்கள், தகவல் ஆதாரங்கள் அனைத்தும் நீதிமன்ற அதிகாரிகள் மிக கவனமாக பரிசீலிக்க வேண்டும். காரணம், அவை நேர்மையானதல்லாமல் இருந்தால், நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாகும்.
ஏஐ பயன்படுத்த தடை
ஏஐ பயன்படுத்தியதாலோ, அவை தவறான தகவல்களை அளித்ததாலோ, எந்த ஒரு முடிவும் நீதிபதியின் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அவர்களே தீர்ப்புகளின் உள்ளடக்கங்களுக்கு முழுமையாக பொறுப்பாளிகள் ஆக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக ஐடி துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றெல்லாம் கூறப்பட்டிருந்தன.. ..
AI கருவிகள் தீர்ப்புகளில் பயன்படுத்த தடை என்று நீதித்துறையில் இந்த உத்தரவானது பலரது கவனத்தை அப்போது பெற்றிருந்தது.. அதேபோல, ஏஐ பயன்பாடு தொடர்பாக ஒரு நீதிமமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது இதுவே முதல்முறையாகும்..
ஏஐ மூலம் தீர்ப்பு
இந்நிலையில், நீதிமன்றங்களில் ஏஐ மூலம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாம்.. அதாவது, சிறிய குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதித்துறையிலும் AI பயன்பாட்டை மத்திய அரசு கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது..
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கு AI பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம், ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ள பிற நாடுகளுக்கு நீதிபதிகளை அனுப்பி ஆய்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.. அந்த வகையில், இனி AI உதவியோடு தீர்ப்புகளை நீதிபதிகள் நீதிமன்றங்களில் வழங்க போவது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications