தாஜ்மகாலை விட 5 மடங்கு பெரிய விண்கல்.. பூமியை நெருங்க இருப்பதாக நாசா வார்னிங்!
நியூயார்க்: தாஜ்மகாலைவிட 5 மடங்கு பெரிய சைஸ் விண்கல் ஒன்று இன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. இதேபோல மேலும் 2 விண்கற்கள் நாளையும், நாளை மறுநாளும் பூமியை கடந்து செல்ல இருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் விண்கற்களின் துகள்களே! ஆம் இந்த பூமி கூட பல விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால்தான் உருவாகியுள்ளது. அப்படியெனில் இந்த பூமியில் உருவான நாமும் விண்கற்களின் துகள்கள்தானே! ஆனால் எந்த விண்கற்கள் நம்மை உருவாக்கியதோ அதே விண்கற்கள்தான் நம்மை அழிக்கவும் செய்யும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது விண்கல் பூமியின் மீது மோதி டைனோசர்கள் அழிந்ததை போல், மனிதர்களும் ஒருநாள் அழிந்துவிடுவார்கள் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விஞ்ஞானிகளின் இந்த கூற்றை நாசா அடிக்கடி மெய்பித்து வருகிறது. நாசா சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், அக்.26-28ம் தேதி வரை, பூமியை 3 விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறது. அதன்படி முதல் விண்கல் இன்று பூமியை கடந்து செல்கிறது. 2024 TB2 என்று பெயிரிடப்பட்ட இந்த விண்கல் 110 அடி விட்டம் இருக்கும். 7.31 லட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறது. இதன் பாதை இப்போது வரை சீராகத்தான் இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் அது நேராக பூமியைத்தான் பதம் பார்க்கும்.
110 அடி விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை தாக்கினால் அது 150 மெகா டன் வெடிபொருள் வெடித்தால் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ அந்த அளவுக்கு தாக்கத்தை இந்த கல் உருவாக்கும். கல் விழுந்த இடத்தில் 600 அடி ஆழமும் 2 கி.மீ விட்டமும் கொண்ட பெரிய பள்ளம் உருவாகும். கல் விழுந்த இடத்திலிருந்து 20 கி.மீ சுற்றளவுக்கு புல் பூண்டு கூட இருக்காது. எல்லாம் முழுமையாக அழிந்துவிடும். இதுவே கடலில் விழுந்தால் சுனாமி ஏற்பட்டு பேரழிவு உண்டாகும்.
இரண்டாவதாக உள்ள விண்கல் 2007 UT3. இதன் சைஸ் வெறும் 73 அடிதான். பூமியிலிருந்து 42 லட்சம் கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. எனவே இந்த கல்லை நினைத்து பயப்பட வேண்டியதில்லை.
ஆனால் மூன்றாவதாக இருக்கும் விண்கல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 2020 WG என அழைக்கப்டும் இந்த விண்கல் 500 அடி விட்டம் கொண்டது. எளிமையாக சொல்வதெனில் தாஜ்மஹாலை விட 5 மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 30 லட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் இது பறந்து செல்கிறது. இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால், அக்.28ம் தேதி இரவுதான் பூமிக்கு கடைசி இரவு.
இந்த கல் பூமியை மோதினால், அது விழுந்த இடத்தில் 2 கி.மீ ஆழத்திற்கு 4 கி.மீ அகலத்திற்கு பெரும் பள்ளம் உருவாகும். மட்டுமல்லாது 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். மேலும் விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500-1000 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிமும் இருக்காது. எல்லாம் தரைமட்டமாகிவிடும். தவிர, எரிமலை வெடிப்பு, சுனாமி என பூமி ஒருவழியாகிவிடும்.
ஆனால் இது எதுவும் இப்போது நடக்காது என்று நாசா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஏனெினல் இந்த விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications