விடிஞ்சா கிறிஸ்துமஸ்! ஆனா விடியுமா? பூமியை நோக்கி பாயும் விண்கல்.. ஷாக் கொடுத்த நாசா
நியூயார்க்: நாளை காலை விடிந்தால் கிறிஸ்துமஸ். ஆனால் பூமிக்கு நெருக்கமாக கடக்கும் விண்கல் பூமி மீது மோதினால் நாளை காலை விடியுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. இது குறித்த தகவலை நாசா பகிர்ந்திருக்கிறது.
விண்வெளியில் கோடிக்கணக்கில் விண்கற்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இதில் சில பூமிக்கு நெருக்கமாக வருகின்றன. இப்படி வரும் விண்கற்களை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பில் கடந்த டிச.12ம் தேதி 2024 XN1 எனும் விண்கல்லை நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கிரக பாதுகாப்பு அமைப்பும் கண்டுபிடித்திருக்கிறது. சுமார் 230 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல், பூமியை மிக நெருக்கமாக இன்று கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த விண்கல் சுமார் 23,726 கி.மீ வேகத்தில் பூமியை சுமார் 72 லட்சம் கி.மீ தூரத்தில் கடந்து செல்கிறது. 72 லட்சம் கி.மீ தொலைவுதானே என்று நாம் நினைக்கலாம். விண்வெளியை பொறுத்தவரை 72 லட்சம் கி.மீ என்பது ரொம்ப சிறியது. ஏனெனில் பூமிக்கும் பக்கத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு சுமார் 2 கோடி கி.மீ இடைவெளி இருக்கிறது. அப்படியெனில் 72 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு மிக நெருக்கமானதுதான். ஒருவேளை இந்த விண்கல் பூமி மீது மோதினால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விண்கல் மோதிய இடத்தில் 33,000 மெகா டன் டிஎன்டி வெடிப்பொருள் ஒரே நேரத்தில் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ அதே அளவுக்கு இது அழிவை ஏற்படுத்தும். கல் விழுந்த இடத்தில் சுமார் ஒன்றரை கி.மீ ஆழத்திலும், 5.5 கி.மீ விட்டத்தில் பெரும் பள்ளம் உருவாகும். மட்டுமல்லாது இந்த இடத்திலிருந்து 100 கி.மீ விட்டத்திற்கு 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். ஒருவேளை கல் கடலில் விழுந்தால், விழுந்த இடத்திலிருந்து 2000 சுற்றளவுக்கு பெரும் சுனாமி ஏற்படும்.
மறுபுறம் காட்டு தீ, எரிமலை வெடிப்பும் ஏற்படும். இது அனைத்தும சேர்ந்து வளிமண்டலத்தை அப்படியே மூடிவிடும். இதனால் காற்று மாசு ஏற்படுவதோடு, செயற்கையான காலநிலை மாற்றம் ஏற்படும். முதலில் செடி, மரங்கள் சூரிய ஒளி இல்லாமல் ஒளி சேர்க்கை செய்ய முடியாமல் இறந்துபோகும். இதனால் இதை நம்பியிருக்கும் சைவ உயிர்கள் அழிந்து போகும். மறுபுறம் சைவ உயிர்களை வேட்டையாடி சாப்பிடும் காட்டுயிர்கள் அழியும். இது உணவு சங்கிலியை பாதித்து அதன் உச்சத்திலிருக்கும் மனிதர்களையும் பாதிக்கும். டைனோசர்கள் அழிந்ததும் இப்படித்தான்.
ஆனால், தற்போது இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications