எல்லாம் அப்படியே நடக்குதே.. பலிக்குதா பாபா வாங்கா கணிப்பு? டிரம்புக்கு நடந்தது என்ன? காது வேற போச்சே
நியூயார்க்: கடந்த முறை தவறவிட்டதை, இந்த முறை தேர்தலில் எட்டிப்பிடித்துவிட்டார் டொனால்ட் டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சோ்ந்த டிரம்ப் தேர்வாகியிருக்கிறார்.. இந்நிலையில், டிரம்ப் பற்றி பாபா வாங்கா கணித்து சொன்ன தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கே, தன்னுடைய 85ம் வயதில் அதாவது 1996-ம் வருடம் இறந்துவிட்டார். தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தவர் பாபா வாங்கா.. உலகத்தில் நிகழக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொன்னவர்..

அந்தவகையில், நூற்றுக்கும் அதிகமான தகவல்களை கணித்து சொல்லியிருந்த நிலையில், அவைகளில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருக்கின்றன.. பல்வேறு காலகட்டத்தில், பெரும்பாலான சம்பவங்கள் அவர் சொன்னதுமே போலவே நடந்திருக்கின்றன.
பாபா வாங்கா: இந்த 2024 க்கான தீர்க்கதரிசனத்தையும் பாபா வாங்கே எழுதி வைத்திருந்தார்.. இந்தியாவில் இந்த வருடம் தீ, வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படும், புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும்.. ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
அதேபோல, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்த வருடம் தன்னுடைய சொந்த நாட்டை சேர்ந்த ஒருவராலேயே படுகொலை செய்யப்படுவார், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், 2024ம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார், அது அவரை காது கேளாதவர் ஆக்கிவிடும்.. மூளையில் கட்டி ஏற்பட்டு, அதனால் பெரிதாக பாதிக்கப்படுவார்" என்றெல்லாம் பாபா வாங்கா கணித்து வைத்திருந்தது கண்டு உலக மக்கள் அதிர்ந்தனர்.
குண்டு துளைத்தது: ஆனால், பாபா வங்கா கணித்து கூறியிருந்தபடியே, கடந்த ஜூலை 13ஆம் தேதி டிரம்பின் காதில், குண்டு துளைத்துவிட்டது. பென்சில்வேனியாவின், பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்..
இதில், டிரம்பின் வலது காதின் மேல் பகுதியில் துளைத்தபடி குண்டுசென்றது.. இதில், ரத்தம் சொட்ட சொட்ட டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டார்.
இதையடுத்து, டிரம்ப் பற்றி பாபா வங்காவின் கணிப்பு, துல்லியமாக இருந்ததாகவே அப்போது அனைத்து பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டிருந்தன.. தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. குடியரசுக் கட்சியை சோ்ந்த டொனால்ட் டிரம்ப் மறுபடியும் தோ்வாகியுள்ளாா்.. அதிக வயதில் அமெரிக்க அதிபராக தோ்வானவா், என்ற பிடனின் சாதனையையும் டிரம்ப் முறியடித்துள்ளாா்.
கணிப்புகள்: இந்நிலையில், 2024-ல் அமெரிக்காவின் டிரம்ப் பற்றி பாபா வங்கா கணித்து சொன்னதும், உண்மையில் நடந்ததும் என்ன? என்பது பற்றியும் அலசல்கள் சோஷியல் மீடியாவில் அலசப்பட்டு வருகின்றன..
அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு, தன்னை துப்பாக்கியால் கொல்ல முயற்சிக்கப்பட்ட சம்பவத்தை பற்றி டிரம்ப் கூறும்போது, "ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் என்னுடைய உயிரை கடவுள் காப்பாற்றியதாக பலா் என்னிடம் சொன்னார்கள்.. அமெரிக்காவை காக்க வேண்டும், அமெரிக்காவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்த காரணமாகும்" என்று தெரிவித்துள்ளார் டிரம்ப்.
உலகம் அழியும்: ஆண்டுக்கு 6 கணிப்பு வீதம் ஒவ்வொரு வருடமும் கணிப்புகளை எழுதி வைத்துள்ளார் பாபா வங்கா.. அந்தவகையில், வரும் 5079ம் ஆண்டுவரை கணிப்புகளை எழுதியிருக்கிறாராம்.. காரணம், 5079ம் ஆண்டு உலகம் அழிய போகிறதாம்...!!












Click it and Unblock the Notifications