காப்பாற்றுங்க! காப்பாற்றுங்க! இந்தியர்களை கொடுமைப்படுத்தும் அமெரிக்கா.. கருணை காட்டாத டிரம்ப்.. ஷாக்
நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் அடுத்தடுத்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அங்கே இந்தியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக அடுத்தடுத்து செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதன்படி பலர் பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு முக்கியமான செய்திகள் வெளியாகி உள்ளன

புகார் 1
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட வெளியேற்றப்படும் இந்தியர்கள்.. அதற்கு முன்பாக கைது செய்யப்பட்டு அகதிகள் முகாம், நாடு கடத்தப்படுவதற்காக வைக்கப்படும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்களில் இவர்கள் கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
உதாரணமாக பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான டேவிந்தர் சிங், சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைத் தாண்டியதற்காக அங்கே உள்ள முகாமில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் அங்கே அகதிகள் முகாமில் கடுமையாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் வைத்துள்ளார்.
18 நாட்கள் என்னை தடுப்பு காவலில் வைத்து இருந்தனர். நான் சீக்கியர். என்னுடைய மதத்தை அவமதிக்கும் விதமாக பேசினார்கள். என்னுடைய தலைப்பாகையை கூட தூக்கி வீசி கொடுமை செய்தனர். என்னுடைய மதத்தை அவமதிக்கும் விதமான செயல்களை செய்தனர். என்னுடைய தலைப்பாகையை அவர்கள் குப்பை தொட்டியில் வீசினார்கள்.
வேகாத ரொட்டி, வேகாத அரிசி, சோளம் , வெள்ளரி, மாட்டிறைச்சி வழங்கப்பட்டது, ஆனால் நான் சைவ உணவு உண்பவர் என்பதால், எங்களுக்கு தனியாக உணவு வழங்கப்படவில்லை. 18 நாட்கள் நரகம் போன்ற கொடுமைகளை அனுபவித்தோம், என்று டேவிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
புகார் 2
ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பிற 10 ஆசிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். சிலரை அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்துவதில் அமெரிக்காவிற்கு சிரமம் இருப்பதால் பனாமாவிற்கு முதலில் நாடு கடத்துகின்றனர்.
முதலில் பனாமாவிற்கு நாடு கடத்திவிட்டு பின்னர் அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கோஸ்டாரிகாவில் இருந்து இவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். அதுவரை பனாமாவில் உள்ள கோஸ்டாரிகா ஹோட்டல் ஒன்றில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அங்கே இவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
1. அதன்படி அங்கே வசிக்கும் இந்தியர்கள் உட்பட பலர்.. தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
2. இந்தியர்கள் பலர்.. எங்களை காப்பாற்றுங்கள் என்று பேப்பரில் எழுதி அதை கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே காட்டி வருகின்றனர்.
3. நாடு கடத்தப்படும் நாங்கள்.. கொடுமைப்படுத்தப்படுகிறோம் என்றும் இந்தியர்கள் புகார் வைத்துள்ளனர்.
4. எங்களுக்கு உடைகள் கூட வழங்கப்படவில்லை. நாங்கள் கொண்டு சென்ற உடைகளை கூட பறிமுதல் செய்துவிட்டனர். கடும் குளிரில் மெல்லிசான உடையை அணிந்து கடுமையாக பாதிக்கப்பட்டோம் என்று அங்கே அடைத்து வைக்கப்பட்டு உள்ள இந்தியர்கள் புகார் வைத்துள்ளனர்.
5. கடுமையான குளிரில் போர்வை கூட இல்லாமல் நாங்கள் வைக்கப்பட்டு இருக்கிறோம். அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லை. குடிப்பதற்கு போதிய அளவு தண்ணீர் கூட இல்லை. உணவு வழங்கப்படவில்லை. சமயங்களில் ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்படுகிறது என்று புகார் வைக்கின்றனர்.
6. இவர்கள் அங்கே அகதிகள் முகாமில் கடுமையாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் வைத்துள்ளனர்.
நாடு கடத்தல்:
10 நாட்களில் 322 இந்தியர்கள் நாடு அமெரிக்க அரசால் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது
இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது. இதுவரை நாடு கடத்தப்பட்டவர்களில் குஜராத்திகள், ஹரியானாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம். இந்த ராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
ICE வகை விமானங்களை நாடு கடத்த பயன்படுத்தினால் மிகவும் மலிவு விலையில் அதாவது ஒரு நபருக்கு ரூ. 55,000 என்ற செலவில் நாடு கடத்த முடியும்.
ஆனால் சாதாரண விமானத்தில் நாடு கடத்தி அது விபத்துக்கு உள்ளானால்.. அது இரண்டு நாட்டு பிரச்சனையாக மாறும். வேறு நாட்டு குடிமகனை கொன்றதாக மாறிவிடும். இதை தடுக்கவே C-17 போர் விமானத்தை டிரம்ப் பயன்படுத்துகிறார்.
நாடு கடத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும், இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும். அமெரிக்க அரசின் துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
-
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications