நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கோவாக்சின் தடுப்பூசி அங்கீகார முடிவு.. உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

கோவேக்சின் தடுப்பூசி பயன்பாடு குறித்து அடுத்த வாரம் முடிவு தெரியவரும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 6 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.. இதில், பிரிட்டன் - ஸ்வீடன் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியானது, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்திசெய்யப்பட்டு அதிக அளவில் பயனாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

 Bharat biotech: Decision On Covaxin Clearance Next Week, Says WHO

அதேபோல, ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது... ஆனால், இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை... பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை.

அதனால், கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது... கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் உயர்நிலை கூட்டமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.. அந்த கூட்டங்களில் முக்கிய ஆலோசனைகளும் நடந்து வருகின்றன...

வேலையை காட்டிய தாலிபான்: நடு வீதியில் கிரேன்களில் கொன்று தொங்க விடப்பட்ட 3 ஆண்கள்.. காரணம் தெரியுமா?வேலையை காட்டிய தாலிபான்: நடு வீதியில் கிரேன்களில் கொன்று தொங்க விடப்பட்ட 3 ஆண்கள்.. காரணம் தெரியுமா?

இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தற்போது அறிவித்துள்ளது. கோவேக்சின் தரமானதா? பாதுகாப்பானதா? பயனுள்ளதா? என்பதை நிபுணர் குழு ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதே கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இந்தியாவில் 25 இடங்களில் நடத்தப்பட்டது. அதுகுறித்த அறிக்கையில், "3-ம் கட்ட பரிசோதனை 18 - 98 வயதுக்குட்பட்ட 130 பேரிடம் நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 12% பேருக்கு பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 0.5% பேருக்கு சற்று தீவிர பக்கவிளைவுகள் ஏற்பட்டன... பிற கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்குத் தீவிர பக்கவிளைவுகள் குறைவாகவே காணப்படுகிறது.

Recommended Video

    Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil

    தீவிர அறிகுறிகளுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 93.4% செயல்திறன் கொண்டுள்ளது. தற்போது பரவியுள்ள டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அறிகுறிகளுள்ள தொற்றுக்கு எதிராக 77.8% செயல்திறன் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அந்த தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bharat biotech: Decision On Covaxin Clearance Next Week, Says WHO
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X