இந்தியாவிற்கு மிகப்பெரிய நிம்மதி.. பரஸ்பர வரி விதிப்பில் ட்விஸ்ட்.. அமெரிக்க சுங்கத்துறை விளக்கம்
நியூயார்க்: இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியான செய்தியை அமெரிக்கா அரசின் சுங்கத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை (அபராத வரி உள்பட) 18 சதவீதமாக குறைத்து அறிவித்திருந்தார். இதில் ரஷ்யா உடன் ஆயில் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் நீக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேநேரம் பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்த வரி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.. அதுபற்றி குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்கா அரசின் சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக பார்ப்போம்.
1. 25% கூடுதல் வரி ரத்து: ரஷ்யா தொடர்பான விவகாரங்களுக்காக, இந்தியாவிலிருந்து வரும் சில பொருட்கள் மீது கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் முதல் 25% கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 6, 2026 அன்று அமெரிக்க அதிபர் பிறப்பித்த புதிய உத்தரவின்படி, இந்த 25% கூடுதல் வரி இப்போது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. இது எப்போதிலிருந்து அமல்? பிப்ரவரி 7, 2026 அதிகாலை 12:01 மணிக்குப் பிறகு அமெரிக்காவிற்குள் நுழையும் அல்லது குடோன்களில் இருந்து விற்பனைக்கு எடுக்கப்படும் இந்தியப் பொருட்களுக்கு இந்த வரிச் சலுகை பொருந்தும். இனிமேல் அந்த பழைய 25% வரி கிடையாது.
3. கட்டிய பணத்தைத் திரும்பப் பெறலாம்: பிப்ரவரி 7-ஆம் தேதிக்குப் பிறகு வந்த பொருட்களுக்குத் தெரியாமல் பழையபடி 25% வரி கட்டியிருந்தால், அந்தப் பணத்தை திரும்பக் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது:
இன்னும் கணக்கு முடிக்கப்படாத பொருட்களுக்கு PSC (Post Summary Correction) மூலம் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
கணக்கு முடிக்கப்பட்ட பொருட்களுக்கு 180 நாட்களுக்குள் முறையீடு செய்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம்.
4. ஒரு முக்கியமான குறிப்பு: இந்த 25% கூடுதல் வரி நீக்கப்பட்டாலும், டிரம்ப் அரசாங்கம் கொண்டு வந்த பொதுவான "பரஸ்பர வரி" நடைமுறை தொடரும். அதாவது, சில குறிப்பிட்ட விதிவிலக்கு பெறாத பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வழக்கமான வரி மட்டும் அமலில் இருக்கும். அதேநேரம் 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாகக் குறைத்து எந்த அறிவிப்பும் இப்போது வரவில்லை. . விதிவிலக்கு இல்லாத இந்தியப் பொருட்களுக்கு அந்த வரி தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று அமெரிக்காவின் சுங்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications